கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களாக 59 விஜய் ரசிகர்கள்... அதில் 13 பேர் போட்டியின்றி தேர்வு..!
சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் புகைப்படத்தை முன்னிறுத்தி சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்களில் 59 பேர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.
அதே வேளையில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு விஜய் ரசிகர்களில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை என்பது மாலை 7 மணி நிலவரப்படியான தகவல்.
இதனிடையே ஆர்வமிகுதியில் கிராம வார்டு கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் வித்தியாசம் தெரியாத பலர் விஜய் ரசிகர்கள் மாவட்ட வார்டுகளில் வெற்றி என இடை இடையே கொளுத்திப்போட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

விஜய் ரசிகர்கள்
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பலர் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தல் ஆனையத்தால் வழங்கப்பட்ட சின்னத்தில் பல்வேறு பதவியிடங்களுக்கு போட்டியிட்டனர். தனது மன்றம் சார்பில் போட்டியிடாமல் எல்லோரும் சுயேச்சையாக களமிறங்கியதால் விஜயும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் நடப்பதை அமைதியாக கவனித்து வந்தார்.

59 பேர் வெற்றி
இந்நிலையில் நாட்டின் முதுகெலும்பான கிராமங்களில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களாக விஜய் ரசிகர்கள் 59 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 59 பேரில் 13 பேர் போட்டியின்றி தேர்வானது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதற்கு அவர்களுக்கு ஊருக்குள் இருந்த தனிப்பட்ட செல்வாக்கே காரணமாக கருதப்படுகிறது. கிராம பஞ்சாயத்துக்களில் என்ட்ரி கொடுத்த விஜய் ரசிகர்களால் ஒன்றிய வார்டுகளிலும், மாவட்ட வார்டுகளிலும் வெற்றிபெற முடியவில்லை.

ஊராட்சி தலைவர்
இதனிடையே ஒரு ரசிகர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. தனது ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட்டதையும், வெளியாகும் முடிவுகளையும் நடிகர் விஜய் எப்படி பார்க்கிறார் என விஜய் ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் நாம் பேசிய போது, '' இது குறித்து தளபதி விஜயிடம் அனுமதி பெற்ற பிறகு உங்களை நேரில் சந்தித்து பேசுகிறேன்'' என்றார்.

நட்பின் அடிப்படையில்
எந்தெந்த ஊர்களில் வெற்றி என்பதை உரியவர்கள் தம்மை அழைத்துச் சொல்வதாகவும் அதை தாம் குறித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பான தகவலை உங்களை போன்றோர் கேட்பதால் நட்பின் அடிப்படையில் பகிர்ந்தேனே தவிர மற்றபடி நான் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என முடித்துக்கொண்டார்.
-
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications