சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் தலைவிரித்தாடும் கொரோனா.. 6 மண்டலங்களில் ஜாஸ்தி.. தமிழக பாதிப்பில் 67% இங்குதான்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஒரே நாளில் 35 கேஸ்கள் எப்படி வந்தது என்றே தெரியவில்லை

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து 1,128 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 32.7 சதவீதமாகும்.

    மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் 1,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முதல் முறையாக மார்ச் 18 ஆம் தேதி டெல்லியிலிருந்து ரயிலில் வந்த வடமாநில இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து மார்ச் மாதம் சென்னையில் 25 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    எண்ணிக்கை

    எண்ணிக்கை

    ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 7-ஆம் தேதி வரை அதிகரித்துக் கொண்டே இருந்த எண்ணிக்கை 10 நாட்களுக்கு குறைவாகவே இருந்தது. இதையடுத்து ஏப்ரல் 19-ஆம் தேதி சென்னையில் 50 பேர் பாதிக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 285 ஆக உயர்ந்தது. கடந்த 10 நாட்களில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 64.22 சதவீதம் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    எண்ணிக்கை

    எண்ணிக்கை

    சென்னையில் அம்பத்தூர், மணலியில் மட்டும் தொற்று இல்லாத நிலையில் தற்போது அனைத்து 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. அதாவது ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர் ஆகிய 6 மண்டலங்களில் தொற்றால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இறப்பு எண்ணிக்கை

    இறப்பு எண்ணிக்கை

    சென்னையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் இரண்டு மடங்கு எண்ணிக்கையில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இதனால் அதிக தொற்றுகள் கண்டறியப்பட காரணமா என்ற அச்சமும் எழுகிறது. எது எப்படியோ இறப்பு எண்ணிக்கையை அரசு குறைத்து கொண்டே வருகிறது. மேலும் அன்றாடம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பது ஒருவகையில் ஆறுதல் அளிக்கிறது.

    கொரோனா

    கொரோனா

    கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் முதலில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தருமபுரி, புதுக்கோட்டையில் கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து கிருஷ்ணகிரியிலும் கொரோனா வந்துவிட்டது. ஆனால் இங்கு வந்த வேகத்தில் அடுத்த நாளே கொரோனா சோதனையில் இல்லை என வந்துவிட்டது. அதுபோல் ஈரோடு மாவட்டமும் கொரோனா இல்லா மாவட்டமாக மாறிவிட்டது.

    English summary
    6 zones in Chennai are highly affected by Coronavirus. Tamilnadu has reached 2000 corona positive patients.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X