சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிசப்தம்.. ஆம்புலன்ஸ்களின் அலறலே இல்லை.. வெறிச்சோடி கிடக்கும் 600 படுக்கைகள்.. நிம்மதியில் சென்னை!

சென்னையில் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் சத்தமே இல்லை.. காரணம், நோயாளிகளின் எண்ணிக்கைகள் குறைந்து வருகிறது.. அதேபோல, ஆஸ்பத்திரியில் பெட் இல்லை என்று புலம்பல்கள் கேட்டபடியே இருந்தன.. இப்போது நிலைமை என்னவென்றால், 600 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.. அந்த அளவுக்கு சென்னையில் தொற்று வீரியம் குறைந்து கொண்டே வருகிறது..!

10 நாளைக்கு முன்பு திடீரென ஒரு பிரச்சனை சென்னையில் வெடித்தது... சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் இடம் இல்லாமல், ஆம்புலன்சிலேயே காத்திருந்த தொற்று நோயாளிகள், அப்படியே இறந்துவிட்டனர்.. இது மிகப்பெரிய கலக்கத்தை சென்னைவாசிகளுக்கு தந்தது..!

கொரோனா: டெல்லியில் 177 குழந்தைகளுக்கு மல்ட்டி சிஸ்டம் அழற்சி நோய் பாதிப்பு-ஷாக் ரிப்போர்ட் கொரோனா: டெல்லியில் 177 குழந்தைகளுக்கு மல்ட்டி சிஸ்டம் அழற்சி நோய் பாதிப்பு-ஷாக் ரிப்போர்ட்

அதுமட்டுமல்லாமல் சென்னையில் எப்போது எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தமாகவே கேட்டது.. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அத்தனை ஆம்புலன்ஸ்களும் ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து கொண்டே இருந்தன.

 குறைவு

குறைவு

இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது.. இப்போது ஆம்புலன்ஸ் நடமாட்டம் குறைந்துவிட்டது.. முன்னாடியெல்லாம் தினமும் 250-லிருந்து 270 அவசர நோயாளிகள் ஆம்புலன்சில் வந்தனர்.. இப்போது, அது 120ஆக குறைந்துள்ளது.

நோயாளி

நோயாளி

அதேபோல, படுக்கைகளும் காலியாக கிடக்கின்றன.. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே ஸ்பெஷலாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.. மொத்தம் 2050 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன... அவையும் ஹவுஸ்ஃபுல் ஆகி கிடந்தது.. ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.. நிறைய பேர் தினமும் டிஸ்சார்ஜ் ஆகி சென்று கொண்டே இருக்கிறார்கள்..

 லாக்டவுன்

லாக்டவுன்

மொத்தம் உள்ள 2050 படுக்கைகளில் 1455 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். 595 படுக்கைகள் காலியாக இருக்கின்றன... அதிலும் இப்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், அது முழுமையாக மக்களுக்கு கை கொடுத்து வருகிறது.. தொற்று மெல்ல மெல்ல குறைந்து, லாக்வுடன் மூலம் நல்ல பலன் கிடைத்து வருகிறது.

நிம்மதி

நிம்மதி

நேற்று முன்தினம் 2,779 கொரோனா கேஸ்கள் இருந்தன.. ஆனால், நேற்று 2,762ஆக குறைந்து இருக்கிறது.. இப்படி தினம் தினம் ஆம்புலன்ஸ் சத்தம் குறைந்து வருவதும், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை கூடி வருவதும், படுக்கைகள் காலியாக கிடப்பதும், டாக்டர்களுக்கும், ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் பெருத்த நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி வருகிறது.. இதே நிலைமை நீடித்தால், சென்னை இயல்பு நிலைமைக்கு கூடிய சீக்கிரம் வந்துவிடும்..!

English summary
600 beds Empty at Chennai Rajiv Gandhi Govt Hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X