ஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..!

சென்னையில் இன்று 688 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் மேலும் குறைந்து வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்... நேற்று 695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... அதேபோல டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது.. இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்.. இனி வரும் காலங்களில் இந்த தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருவது ஆறுதலை தந்து வருகிறது.

 688 persons were affected in Chennai today

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,79,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,859 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம், தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்... இதையடுத்து, மொத்தம் பலி எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 197751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று சென்னையில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதேபோல, மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்து கோவையில் 218 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு 150, ஈரோடு 155, சேலம் 147, திருவள்ளூர் 138 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
கோவையில் 7 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.. செங்கல்பட்டு 2 , கடலூர், காஞ்சிபுரம், கரூர் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.. சேலத்தில் 2 பேரும், நாமக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.. திருவள்ளூர் 2, திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும், திருப்பூரில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+