"ஏஏ, நகரு".. நம்ம விஜயகாந்த்தா?.. ஸ்டாலினும், பாஜகவும்.. அல்டிமேட் பிளானில் கூட்டணி.. செம்ம தேமுதிக
விஜயகாந்த்தின் தேமுதிக யாருடன் இந்த முறை கூட்டணி வைக்க போகிறது
சென்னை: விஜயகாந்த்தின் கட்சி தேமுதிக, யாருடன் கூட்டணி வைக்க போகிறது? யார் எத்தனை சீட்கள் தர போகிறார்கள்? அதற்கு தேமுதிக தன்னை எந்த அளவுக்கு பலப்படுத்தி கொள்ள வேண்டும்? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் அரசியல் களத்தில் முளைக்க தொடங்கி உள்ளன.
எம்பி தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறது என்றாலும், இப்போதே கூட்டணி சலசலப்புகள் ஆங்காங்கே ஒலிக்க தொடங்கிவிட்டன.. கடந்த 6 மாத காலமாகவே இதற்காக தமிழக பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று திடுதிப்பென்று அறிவித்து, பாஜகவுக்கே ஷாக் தந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்தவகையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜயகாந்த்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பிரேமலதா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, நடைபெற உள்ள 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வரும் என பாஜகவினர் சொல்லி வருகிறார்கள்.. தேமுதிகவை பொறுத்தவரை நேர்மையான தேர்தலை தான் நாங்கள் எதிர்கொள்வோம் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும், நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு... தேமுதிகவை பொறுத்தவரை பாஜகவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி கிடையாது.... யாருடனும் இப்போது வரை கூட்டணியில் கிடையாது என்று கூறியிருந்தார்.

1% ஆஹா
பிரேமலதா இப்படி சொல்லிவிட்டாலும், தனித்து தேமுதிகவால் களம்காண முடியாது என்பது உண்மை.. அதேசமயம், கடந்த முறை தேமுதிகவை கூட்டணியில் சேர்த்து கொள்ளாமல், எடப்பாடி எடுத்த தவறான முடிவை பல்வேறு அரசியல் விமர்சகர்களும் விமர்சிக்கவே செய்தனர்.. என்ன இருந்தாலும், விஜயகாந்த்தை கைவிட்டிருக்க கூடாது என்ற ஆதங்க குரல்கள், திமுக ஆட்சிக்கு வந்தும்கூட ஒலித்து கொண்டிருந்தன.. இப்போது எம்பி தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வரும்நிலையில், ஒருசதவீதத்துக்கும் குறைவான வாக்கு சதவீதத்தை வைத்திருக்கக்கூடிய தேமுதிகவை, யார் எந்த கூட்டணியில் சேர்த்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

விஜயகாந்த் பாசம்
ஸ்டாலினை பொறுத்தவரை, நண்பர் விஜயகாந்த் மீது அபரிமிதமான பாசத்தை வைத்திருப்பவர்.. சில மாதங்களுக்கு முன்பு, தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் பலர், திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தபோதுகூட, விஜயகாந்த் மனம் புண்படும்படி யாரும் நடந்து கொள்ள வேண்டாம் என்று மறைமுகமாக அவர்களது வருகையை தடுத்து நிறுத்தினார் ஸ்டாலின்.. அந்தவகையில், தேமுதிகவை இணைத்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேசமயம், விஜயகாந்த் மீது பாஜக மேலிட தலைவர்களுக்கும் தனி பிரியம் உண்டு என்பதால், இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அக்கட்சி ஆர்வம் காட்டக்கூடும்..

ஹெல்த்
ஒருவேளை, அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டாலோ அல்லது தனித்து போட்டியிட்டாலோ, தேமுதிகவுக்கு ஒரு சீட் கண்டிப்பாக பெற்றுத் தந்துவிடும் என்றே தெரிகிறது... அப்படியானால் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வருவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.. விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாள் விழாவின்போது, தொண்டர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, தொண்டர்களை மறைத்து கொண்டு நிர்வாகிகள் நின்றிருந்தபோது, "ஏஏ, நகரு" என்று சைகையால் விஜயகாந்த் சொன்னது, வீடியோ காட்சிகளாக வெளிவந்தன.. எனவே, விஜயகாந்துக்கு பேச்சு சரியாக வரவில்லை, நிற்பதற்கும் முடியவில்லை என்ற சூழலில், இந்த 2 பிரச்சினைகளையும் தேர்தலுக்குள் சரிசெய்துவிட முடியும் என்று குடும்பத்தினர் பலமாக நம்புகின்றனராம்.

விஜயபிரபாகரன்
அதுவரை அதற்காகவே, தொண்டர்களை சோர்வடையாமல் வைத்துக் கொள்ளவும், இருக்கும் தொண்டர்களை கட்டிக்காப்பாற்றுவதற்காகவும், கட்சி தலைமை வேகமாக செயல்பட துவங்கி உள்ளது. உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்... மற்றொருபக்கம் விஜயபிரபாகரன், இளைஞர்களை கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார்... கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.. ஆனால் அதேசமயம், தேமுதிகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்த, வீழ்ந்து கிடக்கும் கட்சியை செங்குத்தாக தூக்கி இந்த செயல்பாடுகள் மட்டுமே போதுமானதாக இருக்காது. மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து, மக்களுடன் நெருங்கியே இருந்தால் மட்டுமே, எந்த கட்சியும் அதன் அடையாளத்தை பெறும்.

கேப்டன் கம் பேக்
அந்தவகையில், ஒருபக்கம் கட்சியை பலப்படுத்தினாலும், இன்னொரு பக்கம் வெகுஜன மக்களின் உணர்வையும், தேவையையும் அறிந்து செயல்பட தேவை தேமுதிகவுக்கு நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.. மதுவிலக்குக்கு எதிராக தமிழக முழுவதும் தேமுதிக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு பிரேமலதாவும் அறிவித்துள்ளதால், இந்த எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது.. விரைவில், புதுரத்தம் பாய்ச்சப்பட்டு தேமுதிக பலம்பெறுமா? தெரியவில்லை.. ஆனால், அதற்குள் எப்படியாவது "கேப்டன்" உடல்நலம் தேறி ரெடியாகி வந்துவிட வேண்டும் என்பதே தேமுதிகவையும் தாண்டி, தமிழக மக்களுக்கே உள்ள, அக்கறை கலந்த எதிர்பார்ப்பாகும்..!!












Click it and Unblock the Notifications