முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்.. 74 சதவீதம் வாக்குகள் பதிவு.. அதிகபட்சம் எந்த மாவட்டம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

அப்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் வார்டு மறுவரையறை காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

இந்த மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

ஊரக உள்ளாட்சித்தேர்தல்

ஊரக உள்ளாட்சித்தேர்தல்

இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக காலை 7 மணி முதலே வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்தனர். தேர்தல் நடைபெறும் சில மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது.

வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு

ஆனாலும் மக்கள் மழையை பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். மொத்தம் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம், கிராம ஊராட்சி மன்ற தலைவர் - இளஞ்சிவப்பு நிறம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) - பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) - மஞ்சள் நிறம் ஆகிய வண்ண வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு உடனுடன் இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் நின்று வாக்களித்தனர். இதேபோல் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுபெட்டிகளுக்கு சீல் வைத்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டது. ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகபட்சம் எங்கே?

அதிகபட்சம் எங்கே?

9 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 9-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 12-ம் தேதி முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 74.37 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. விழுப்புரத்தில் அதிகபட்சமாக 81.36% வாக்குகள் பதிவாகி உள்ளன. ராணிபேட்டையில் 81 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 80% வாக்குகளும் பதிவாகி உள்ளன. செங்கல்பட்டில் 67%, கள்ளக்குறிச்சி 72%, வேலூர் 67%, திருப்பத்தூர் 78%, திருநெல்வேலி 69%, தென்காசி 74% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+