விஜயா.. ரஜினியா.. ராகவா லாரன்ஸ் மெகா திட்டம்.. திருச்சியில் ஆட்டம் ஆரம்பம்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் களம் அப்படியே மாறியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியே புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். விரைவில் அரசியல் கட்சியையும் அவர் ஆரம்பிக்கவுள்ளார். ரஜினியின் மனைவி மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார். வருகிற 11 ஆம் தேதி அரசியலில் இறங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். அவர் அரசியலில் இறங்குவது முடிவாகியுள்ள நிலையில், எந்த பக்கம் நிற்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது. விஜய் அரசியலில் இறங்கி 2 ஆண்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறவுள்ளன. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் முக்கிய முடிவு
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. பல ஊடக நண்பர்கள் என்னை செல்போனில் தொடர்புகொண்டு, இந்த விஷயம் தொடர்பாக தெளிவுடுபத்த கேட்கிறார்கள். என்னைப்பற்றி வெளியாகி வரும் தகவல்களுக்கு நானே பல கருத்துகளை மக்களிடம் பகிர வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் தற்போது பென்ஸ் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். வருகிற 10 ஆம் தேதி வரை பென்ஸ் படத்தின் படப்பிடிப்பில் தான் இருப்பேன். படப்பிடிப்பு முடிந்து என் அம்மாவின் ஆசிர்வாதத்துடன் என் வாழ்க்கையின் முக்கியமான முடிவு குறித்து வருகிற 11 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன்" என்று தன்னுடைய தாயுடன் எடுத்த புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன செய்ய போகிறார்
ராகவா லாரன்ஸ் அரசியலில் இறங்கினால் திருச்சியில் சுயேச்சையாக போட்டியிடுவாரா அல்லது தவெகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தவெகவினர் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் லாரன்ஸ், அண்ணாமலையின் இயக்கம் அல்லது ரஜினியின் இயக்கத்தின் ஆதரவில் நேரடியாக தேர்தலை சந்திப்பார் என்றும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ராகவா லாரன்ஸ் விஜயின் நெருங்கிய நண்பர். அதேநேரத்தில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அதனால் அவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications