சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்

Google Oneindia Tamil News

சென்னை: கரூர் நிறுவனம் அனுமதியின்றி இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் லெபனான் போல் சென்னையிலும் வெடிவிபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Recommended Video

    வெடித்துச் சிதறிய 2750 டன் Ammonium Nitrate, 200 KM-க்கு அப்பால் சத்தம் | Oneindia Tamil

    லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் நேற்றைய தினம் திடீரென வெடித்தது. இதனால் துறைமுகத்திலிருந்து 100 அடி தூரத்தில் இருந்த கட்டடங்கள் சேதம் அடைந்தன.

    நகரில் கரும்புகை வெளியேறியதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 100 பேர் பலியாகிவிட்டனர்.

    இந்தியாவில் 20 லட்சம் பேரை எட்டப்போகும் கொரோனா - 12,82,215 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்இந்தியாவில் 20 லட்சம் பேரை எட்டப்போகும் கொரோனா - 12,82,215 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

    6 ஆண்டுகள்

    6 ஆண்டுகள்

    பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய வேதிப்பொருளை சற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் வெடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தால் 2 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துவிட்டனர். இதனால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    அமோனியம் நைட்ரேட்

    அமோனியம் நைட்ரேட்

    இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலும் கடந்த 6 ஆண்டுகளாக அமோனியம் நைட்ரேட் பாதுகாக்கப்பட்டு வருகிறது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கரூரில் உள்ள நிறுவனம் ஒன்று அனுமதியின்றி 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்டை சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்தது.

    2,750 டன்

    2,750 டன்

    சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ரசாயனத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரகிகள் சென்னை துறைமுகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். லெபனானில் 6 ஆண்டுகளாக வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து 100 பேர் பலியான விபத்தை எண்ணி சுங்கத் துறை அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் அச்சமடைந்துள்ளார்கள்.

    ஆலோசனை

    ஆலோசனை

    லெபனான் விபத்து போல் சென்னையிலும் ஏற்பட்டுவிடுமோ என சுங்கத் துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளார்கள். லெபனான் போல அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்து 6 ஆண்டுகளாக 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதை பாதுகாப்பாக அழிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    English summary
    740 metric tonnes of Ammonium Nitrate which was seized from Karur Company 6 years before is being kept in Chennai port trust leads to panic if it happens like Lebanon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X