சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆறு புஷ்பங்கள்".. யார் தினகரனா?.. பாஜகவின் ராஜதந்திரத்தில் கிறுகிறுத்து போகிறதா எடப்பாடி டீம்..?

எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக கூட்டணி வைக்க முன்வருமா என்ற சந்தேகம் உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால், தங்களுக்கு பெரிதாக நன்மை கிடைத்துவிடாது என்று பாஜக நினைக்கிறதாம்.. இதற்காக புது கணக்கு ஒன்றை போட்டு வருவதாக கூறுகிறார்கள்.

டெல்லி மேலிடத்தை பொறுத்தவரை, அதிமுக விவகாரத்தில் இதுவரை தலையிடவில்லை.. நீதிமன்றத்துக்கு செல்லும் முன்பேயே, இவர்களின் பஞ்சாயத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை..

இருவரையும் அழைத்து பேசவில்லை.. சமாதானமும் செய்யவில்லை.. இரு தரப்புமே தங்களுக்கு வேண்டும் என்று சொல்லி வருகிறதே தவிர, யாருக்கும் வெளிப்படையாக ஆதரவும் தரவில்லை.. எதிர்ப்பும் காட்டவில்லை.. அமைதியாக நின்று ஒதுங்கி வேடிக்கை பார்த்து வருகிறது..

அதேசமயம், தேர்தல் வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறது.. இதனால் தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் கணக்கு எப்படி உள்ளது என்பது குறித்த கேள்விகளை நாம் அரசியல் நோக்கர்களிடம் முன்வைத்தோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

உறுதியா? எடப்பாடி தரப்பிடம் கேட்ட நீதிபதி.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஓபிஎஸ்! ஆனா.. அங்கேதான் சிக்கலே உறுதியா? எடப்பாடி தரப்பிடம் கேட்ட நீதிபதி.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஓபிஎஸ்! ஆனா.. அங்கேதான் சிக்கலே

 20 முதல் 25 சீட்டு

20 முதல் 25 சீட்டு

எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாலோ அல்லது அமித்ஷாவையே சென்று சந்தித்துவிட்டு போனதால், பாஜகவின் ஆதரவு எடப்பாடிக்கு இருக்கிறது என்றோ கணக்கில் கொள்ள முடியாது. காரணம், ஓபிஎஸ் + எடப்பாடி இரு தரப்பினரையுமே இந்த நிமிடம் சரிசமமாகவே பாஜக மேலிடம் நடத்துகிறது. தமிழகத்தல் எப்படியும் 20 முதல் 25 சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் முனைப்பில் பாஜக உள்ளதால், ஒற்றை தலைமை விவகாரத்தை அவ்வளவு சீக்கிரம் கடந்து சென்றுவிட முடியாது.

 தொகுதிகள்

தொகுதிகள்

பாஜக நினைத்திருந்தால், இந்த பிரச்சனையை என்றோ தலையிட்டு சரிசெய்திருக்கலாம்.. ஆனால், இதில் தங்களுக்கு என்ன ஆதாரம் என்பதைதான் கணக்கிறது.. 2 விஷயங்களை பாஜக மேற்கொள்ளலாம்.. ஒன்று, 20 சீட்டுகள் + ஆதரவான தொகுதிகள் போன்றவைகளை கேட்டு தமிழகத்தில் தேர்தலை சந்திப்பது.. அல்லது இவ்வளவு சீட்டுகளை எடப்பாடி தரப்பில் ஒதுக்காமல் போனால், இதையே சாக்காக வைத்து, பிற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திப்பது.. என்ற முடிவுகளை எடுக்கலாம்.

 2 ப்ளான்கள்

2 ப்ளான்கள்

இதில், பாஜகவைவிட எடப்பாடிக்குத்தான் சறுக்கலாக இருக்கும்.. காரணம், ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, பாதிக்கு பாதி சீட் என்றால் மட்டுமே களத்தில் இறங்க ஒப்புக்கொள்வார்.. ஆனால், சரிக்கு சரி சீட் என்பதற்கு எடப்பாடி நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார்.. தன்பக்கமே மெஜாரிட்டி ஆதரவுகள் உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு மனம்வந்து தாராளங்களை காட்ட வாய்ப்பே இல்லை.. அப்படி இருக்கும்பட்சத்தில் ஓபிஎஸ்ஸை கழட்டிவிடுவார்.. இதனால், பாஜகவும் இல்லாமல், ஓபிஎஸ்ஸும் இல்லாமல் எடப்பாடி தனிமரமாவார்.. போதாக்குறைக்கு, இந்த முறை பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் எடப்பாடியுடன் கூட்டணி வைக்க ஆர்வம் இல்லாமல் உள்ளதால், எடப்பாடி தரப்பின் கூட்டணி மேலும் பலவீனமாகும்..

 7% வாக்கு வங்கி

7% வாக்கு வங்கி

இதற்கு நடுவில் சீமான், டிடிவி தினகரன் இருவரையும் மறந்துவிடக்கூடாது.. கடந்த முறை அதிமுகவின் வாக்குகளை இவர்கள் 2 பேரும்தான் காலி செய்தார்கள்.. இந்த முறை சீமானுக்கு 7 சதவீத வாக்கு வங்கி உள்ளது.. தினகரன் தனக்கான செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.. அந்தவகையில், இவர்கள் 2 பேரும் பிரிக்கும் வாக்குகளும் அதிமுகவுக்கான வாக்குகள்தான்.. எனவே, இதுவும் எடப்பாடிக்கு மைனஸ் பாயிண்ட்டாகவே அமையும்.. எல்லாவற்றிற்கும் மேலாக, திமுக என்ற அசுர சக்தி உள்ளது.

 முனுசாமி

முனுசாமி

ஆக, பாஜக, திமுக, ஓபிஎஸ், சீமான், டிடிவி, சசிகலா, கமல், பாமக, தேமுதிக, திமுகவின் கூட்டணிகள், என இவர்கள் அனைவருமே தனித்தனியாகவோ, அல்லது தங்களுக்கு சாதகமானவர்களுடன் கூட்டணியாகவோ, களமிறங்கும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள்தான் கூடும்.. அதனால்தான், பாஜக ஆரம்பத்தில் இருந்தே இப்போதுவரை, அதிமுகவை கரெக்ட்டாக டீல் செய்து வருகிறது.. இன்னும் சொல்லப்போனால், எடப்பாடியை மட்டும் நம்பி இறங்கினால் பாஜகவுக்குதான் மைனஸ்.. காரணம், சிவி சண்முகம், முனுசாமி போன்ற எதிர்ப்பு பாஜக முகங்களை, எடப்பாடி தன்னை சுற்றி வைத்திருப்பதால், கூட்டணி வைத்தாலும் பெரிதாக பலன் கிடைக்காது என்று பாஜக கணக்கு போடுகிறது..

 6 கட்சிகள்

6 கட்சிகள்

அதாவது, டிடிவி + சசிகலா + பாமக + தேமுதிக + ஓபிஎஸ் என பாஜகவுடன் சேர்ந்து 6 டீமும் ஒன்றானால், இதனால் பாஜக மட்டுமே பிரதான ஆதாயம் அடையுமே தவிர, எடப்பாடிக்கு சாதகமான சூழல்கள் வர வாய்ப்பில்லை.. சொந்த கட்சி விவகாரங்களை, ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ளாமல், தேர்தல் ஆணையம், சுப்ரீம்கோர்ட்களில் கொண்டு போய் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தால், அது எடப்பாடி பழனிசாமிக்குதான் பெருத்த மைனஸாக இருக்கும்.. ஓபிஎஸ்ஸூடன் அவர் இணைந்தால் மட்டுமே கட்சி வசமாகும்.. தேர்தலிலும் வெல்வது சாத்தியமாகும்" என்றனர்.

English summary
8 parties: Will Edapadi Palaniswami lose the support of Delhi BJP and whats will OPS do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X