சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. தலைமை செயலாளருக்கு தகவல் ஆணையம் திடீர் பரிந்துரை ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2011-2020 வரை நடைபெற்ற உதவிப் பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

தேர்வில் குளறுபடி

தேர்வில் குளறுபடி

உதவிப் பேராசிரியர் தேர்வில் சரியான விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி நடந்ததாகவும், தேர்வர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

தகவல் ஆணையம் அதிருப்தி

தகவல் ஆணையம் அதிருப்தி

இது தொடர்பாக தலைமை செயலருக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

சீனிவாசன், நந்தகுமார்

சீனிவாசன், நந்தகுமார்

இதனடிப்படையில், மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

கட்டாய ஓய்வு?

கட்டாய ஓய்வு?

2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தான் தலைவர்களாக பணியாற்றி உள்ளார்கள். .மாநில தகவல் ஆணையர் பரிந்துரை பேரில் தலைமைச் செயலாளர் ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. .புகாருக்கு ஆளான 9 ஐஏஎஸ் அதிகாரிகளில் சுர்ஜித், விபு நாயர் தவிர 7 பேர் தற்போது பணியில் உள்ளனர்.

English summary
The State Information Commission has recommended that 9 IAS officers, who were in charge of the Teachers' Selection Board in Tamil Nadu, be sent on compulsory retirement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X