சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு கட்டு கீரை ரூ. 35, 1 முருங்கைக்காய் ரூ. 40... உச்சத்தில் காய்கறிகளின் விலையால் மக்கள் தவிப்பு

கீரை வகைகள் முற்றிலும் வரத்து குறைவால் ஒரு கட்டு 35 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக் காய் கிலோ 200க்கு மேல் விற்பனையாகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கனமழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கத்திரிக்காய், பீன்ஸ், பட்ட அவரை, முருங்கைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. கீரை வகைகள் முற்றிலும் வரத்து குறைவால் ஒரு கட்டு 35 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக் காய் கிலோ 250க்கு மேல் விற்பனையாகிறது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 4 வது நாளாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விற்பனை 1 கிலோ 80 க்கும் சிறு மொத்த விற்பனை 90 க்கும் சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் 100 முதல்120 ரூபாய் வரை மாற்றமின்றி விற்பனையாகிறது.

A bundle of lettuce costs Rs. 35 People suffering due to high vegetable prices

இன்று மொத்த 43 வாகனத்தில் 650 டன் தக்காளி வந்து சேர்ந்தது. அதேபோல் இதர அத்தியாவசிய காய்கறிகள் மொத்தம் 5000 டன் தேவை உள்ள நிலையில் 1500 டன் இன்று வரத்து குறைந்து 3500 டன் மட்டுமே வந்துள்ள நிலையில் அதன் விலையும் நேற்று விலையில் 60 லிருந்து 80 ரூபாய்க்கு கூடுதலாக இன்று விலை உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 4 வது நாளாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விற்பனை 1 கிலோ 80 க்கும் சிறு மொத்த விற்பனை 90 க்கும் சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் 100 முதல்120 ரூபாய் வரை மாற்றமின்றி விற்பனையாகிறது.

இன்று மொத்த 43 வாகனத்தில் 650 டன் தக்காளி வந்து சேர்ந்தது. அதேபோல் இதர அத்தியாவசிய காய்கறிகள் மொத்தம் 5000 டன் தேவை உள்ள நிலையில் 1500 டன் இன்று வரத்து குறைந்து 3500 டன் மட்டுமே வந்துள்ள நிலையில் அதன் விலையும் நேற்று விலையில் 60 லிருந்து 80 ரூபாய்க்கு கூடுதலாக இன்று விலை உயர்ந்து விற்பனையாகிறது.

அத்தியாவசிய காய்கறிகளான உஜாலா கத்திரிக்காய் 1 கிலோ 80, நாட்டுத் தக்காளி கிலோ 90 க்கும், வெங்காயம் 36 வெண்டைக்காய் 70 க்கும், கேரட் 70 க்கும், அவரைக்காய் 80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கீரை வகைகள் முற்றிலும் வரத்து குறைவால் ஒரு கட்டு 35 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

முருங்கைக்காய் வரத்து அடியோடு‌ குறைந்து போனதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணைத் தொடும் அளவுக்கு எகிறியுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் நேற்றைய தினத்தில் ரூ 150க்கு விற்பனையானது. இந்த சூழலில் விலை அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 250 க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு முருங்கை காய்‌ 45 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் 14 கிலோ ட்ரே ரூ.1,200 க்கும், 28 கிலோ ட்ரே ரூ.2,400க்கும் விற்றது. அதேநேரம், வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் தக்காளியைத் தொடர்ந்து அவரைக்காயும் விலை உயர்ந்து தற்போது கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது. அவரைக்காய் முதல் ரகம் கிலோ ரூ.120-க்கும், இரண்டாவது ரகம் ரூ.100க்கும் விற்பனையானது.

கத்தரிக்காய் ரூ.90, வெண்டைக்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.90, நாட்டு முருங்கைக்காய் ரூ.100, நாசிக் முருங்கை கிலோ ரூ.250 என விற்பனையானது. காய்கறிகள் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதே நேரம் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காய்கறிகள் இன்றைய விலை நிலவரம்

  • வெங்காயம் ரூ. 36/30
  • நவீன் தக்காளி ரூ. 90/85
  • நாட்டு தக்காளி ரூ. 90/85
  • உருளை ரூ. 26/22
  • சின்ன வெங்காயம் ரூ. 60/50
  • ஊட்டி கேரட் ரூ. 70/60
  • பெங்களூர் கேரட் ரூ. 50
  • பீன்ஸ் ரூ. 70/65
  • பீட்ரூட் ஊட்டி ரூ. 55/50
  • கர்நாடக பீட்ரூட் ரூ. 35/25
  • சவ் சவ் ரூ. 25/22
  • முள்ளங்கி ரூ. 45 /40
  • முட்டை கோஸ் ரூ. 40/35
  • வெண்டைக்காய் ரூ. 100
  • உஜாலா கத்திரிக்காய் ரூ. 80/70
  • வரி கத்திரி ரூ. 60/55
  • காராமணி ரூ. 65
  • பாவக்காய் ரூ. 50/40
  • புடலங்காய் ரூ. 50/45
  • சுரக்காய் ரூ. 35/30
  • சேனைக்கிழங்கு ரூ. 17/15
  • முருங்ககாய் ரூ. 250
  • சேம கிழங்கு ரூ. 25/15
  • காலிபிளவர் ரூ. 38/35
  • வெள்ளரிக்காய் ரூ. 20/18
  • பச்சை மிளகாய் ரூ. 35/30
  • பட்டாணி ரூ. 40/30
  • இஞ்சி ரூ. 45/20
  • பூண்டு ரூ. 150/90
  • அவரைக்காய் 100/90
  • மஞ்சள் பூசணி ரூ. 15
  • வெள்ளை பூசணி ரூ. 20
  • பீர்க்கங்காய் ரூ. 60/50
  • எலுமிச்சை ரூ. 30
  • நூக்கள் ரூ. 60
  • கோவைக்காய் ரூ. 60/50
  • கொத்தவரங்காய் ரூ. 50
  • 1 வாழைக்காய் ரூ. 6
  • 1 வாழைப்பூ ரூ. 15
  • பச்சைகுடமிளகாய் ரூ. 70
  • வண்ண குடமிளகாய் ரூ. 250
  • கொத்தமல்லி ரூ. 40
  • புதினா ரூ. 40
  • கருவேப்பிலை ரூ. 40
  • அனைத்து கீரை 1 கட்டு ரூ. 40
  • 1 தேங்காய் ரூ. 35
English summary
Vegetable supply has declined and prices have peaked due to heavy rains. Thus, the price of eggplant, beans, peas and drumsticks is more than 100 rupees per kg. Spinach varieties are selling for around Rs 35 a pack today due to complete shortage of supply. One kg of drumsticks sells for over 200 kg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X