எனக்கு பேத்தி பிறந்திருக்கா.. மகிழ்ச்சியில் வயிறு முட்ட குடித்த சுரேஷ்! காலையில் காத்திருந்த ஷாக்!
சென்னை : சென்னையில் தனக்கு பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலதிபர் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அணைக்கப்படாத ஒரு சிகரெட் துண்டால் ஒரு குடும்பமே தற்போது மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
முன்பெல்லாம் குழந்தை பிறந்தது முதல் திருமணம் வரையிலான சுப நிகழ்ச்சிகளின் போது கோவிலுக்கு செல்வது பெரியவர்களிடம் ஆசி பெறுவது என்ற நடைமுறை தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது என்றே கூறலாம்.
திருமணம் தொடங்கி துக்க வீடுகளாக இருந்தாலும் மது விருந்து வைப்பது தான் தற்போது பேஷன் ஆகிவிட்டது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மது குடிப்பவர்களே ஆக்கிரமித்து இருப்பது பறவையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தொழிலதிபர்
குழந்தை பிறந்தாலும் ட்ரீட் குழந்தைக்கு திருமணம் என்றாலும் ட்ரீட் பெரியவர்கள் இருந்தாலும் ட்ரீட் என மது ட்ரீட் கலாச்சாரத்தால் தற்போது ஒரு குடும்பம் சொல்ல முடியாத சோகத்தை அனுபவித்து வந்திருக்கிறது. பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலதிபர் ஒருவர் தூக்கத்திலேயே தீயில் கருகி உயர்ந்து இருக்கிறார். சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான சுரேஷ்குமார் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் இவரது மகனான ஸ்டீபன் ராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பேரக் குழந்தை
சில மாதங்களுக்கு பிறகு ஸ்டீபன் ராஜ் மனைவி சுஜிதா கருவுற்று இருக்கிறார். இதனையடுத்து அந்த குடும்பமே மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருக்கிறது. பேரக்குழந்தையை வரவேற்பதற்காக சுரேஷ்குமார் ஆர்வத்தோடு காத்திருந்ததோடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உற்றார் உறவினர்களை அழைத்து பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார். இதில் நூற்றுக்கணக்கான கலந்துகொண்டு சுஜிதாவை வாழ்த்தி இருக்கின்றன இதை எடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஜிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதை அடுத்து ஸ்டீபன் ராஜ் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் அங்கு பிரசவம் செய்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்திருக்கின்றனர்

மகிழ்ச்சி செய்தி
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுஜிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது இதை அடுத்து தான் தந்தையான தகவலை தனது தந்தையான சுரேஷ்குமாருக்கு தெரிவித்திருக்கிறார் ஸ்டீபன் ராஜ். தொடர்ந்து பேரக் குழந்தையை பார்ப்பதற்காக அலுவலகத்திலிருந்து மின்னல் வேகத்தில் கிளம்பிய சுரேஷ் மருத்துவமனைக்குச் சென்று தனது பேத்தியை முதன்முதலாக கையில் ஏந்தி முத்தமழை பொழிந்திருக்கிறார் மேலும் மிகவும் உற்சாகமாக தனது உறவினர்கள் அனைவருக்கும் தனக்கு பேரக் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்து இருக்கிறார்.

படுக்கையில் மரணம்
பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் தனது மகனை மருமகளுடன் மருத்துவமனையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்த சுரேஷ்குமார் தொடர்ந்து தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனக்கு பேத்தி பிறந்து இருக்கிறாள் என மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனது வீட்டில் உள்ள இரண்டாவது மாடியில் பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் விடிய விடிய சுரேஷ்குமார் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. தொடர்ந்து அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கரும்புகை கிளம்பி வெளியேறியது இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தோர் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

என்ன காரணம்?
அங்கு வந்த போலீசார் தீனைப்புத் துறையினரின் உதவியோடு தீயை அணைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் கருகிய நிலையில் சுரேஷ்குமார் சடலம் இருந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை மீட்க போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏசி இயந்திரம் தீப்பிடித்து எrஇந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் மின் கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ தொடர்ந்து அறை முழுவதும் பரவி சுரேஷ்குமார் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என ஒரு தகவல் உலாவுகிறது.

சிகரெட் துண்டு
மற்றொருபுறம் அந்த அறை முழுவதும் சிகரெட் துண்டுகளும் மது பாட்டில்களும் இருந்ததால் விடிய விடிய பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் மது குடித்த சுரேஷ் குமார் சிகரெட் துண்டுகளை படுக்கையிலேயே விட்டிருக்கலாம். இதனால் தீப்பிடித்து எறிந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதற்கான தடயங்கள் இல்லாத நிலையில் ஏசி எந்திரம் எப்படி தீப்பிடித்தது எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சிகரெட் தூண்டின் மூலம் பற்றி அது அறை முழுவதும் பரவி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications