வளர்ந்து வரும் தலைவர்..பிரஸ் மீட்டில் ‘ஓவர் மிதப்பு- ‘அவரு’ மாதிரியா நடப்பது? விளாசும் நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவர் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாமல் எக்ஸ்போஸ் ஆகிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் நெட்டிசன்கள்.

தமிழ்நாடு அரசியல் களம் எத்தனையோ 'தலை'களை சந்தித்துவிட்டது.. ஏற்றம் கண்ட பல கட்சிகள் இருந்த இடம் தெரியாமலே போயிருக்கின்றன. . வளர்ந்து வரும் நேரத்தில் வம்படி சேட்டைகளால் வளராமலேயே தேய்பிறையாகி இருக்கின்றன.

A Controversy Gossip on TamilNadu Political leader

நடுத்தெருவுக்கு வந்த கட்சி: இத்தகைய சரித்திரத்துக்கு எல்லாம் வரலாற்று பக்கங்களை புரட்ட வேண்டியது இல்லை.. கடந்த 10,15 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையே பார்க்கலாம். கிடுகிடுவென ஏணிகளில் வேகமாக உயர்ந்த நிலைக்கு போன ஒரு கட்சி, நடுத்தெருவில் அங்கிட்டா? இங்கிட்டா? என அல்லாடுவதைக் கூட பார்க்கலாம்.

அவரும் அப்படித்தான் இருந்தார்: நாங்கதான் அடுத்து.. வளர்ந்துகிட்டு இருக்கோம்.. வளர்ந்துவிட்டோம் என்கிற இறுமாப்பில் பொதுவெளி என்று கூட பார்க்காமல் எகத்தாளம் காட்டிய தலைமை என்னவானது என்பது நாடறியும் நாட்டு மக்கள் அறிவார். அந்த இறுமாப்பை இன்னமும் அந்த தலைமையை பின் தொடருகிற 'வாரிசுகள்" பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது பட்டும் திருந்தலை என்பதுதான் பொதுவான வசை சொல்லாக இருக்கிறது.

எக்ஸ்ட்ரீம் லெவல் அலப்பறை: அப்படியான ஒரு இன்னொரு 'தலைமையை' தமிழ்நாடு கண்கூடாக கை கொட்டி சிரித்தபடி பார்த்து கொண்டிருக்கிறது.. அதே நாங்கதான் அடுத்து.. ஏய் நாங்கதான் கெத்து.. நாங்கதான் ஆட்சி என்கிற "ஓவர் மிதப்பில்" பொதுவெளியில் செய்தியாளர்களிடம் எகிறுவது.. என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிக் கொட்டுவது... காலை பிரஸ்மீட்டிலேயே "மிதப்பாக" அலப்பறையை கூட்டுவது என எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய்க் கொண்டிருக்கிறார் அந்த தலைவர் என்பதுதான் நெட்டிசன்ஸ் விளாசால்.

ஓவர் மிதப்பை காட்டுறாரே: அதுவும் இப்படி தலைக்கனம் பிடிச்சு பேசி பேசியே காணாமல் போன தலைவர் எப்படி பொதுவெளியில் சேட்டை செய்வாரோ அதேபோல கைகளை உயர்த்தி குரலை உயர்த்தி நக்கலடிக்கிறேன் என்ற பெயரில் "மிதப்பை" ஓவராக காட்டிவிட்டார் இந்த வளரும் தலைவர்.. அதனால்தான் நெட்டிசன்ஸ் ரொம்பவே காண்டாகிப் போய் நேற்று காலை முதல் கடந்த 24 மணிநேரமாக வெளுத்தெடுக்கின்றனர். அது சரி 'தெளிவு' வந்தால்தானே புரியும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+