அமைச்சருக்கு ரொம்ப "க்ளோஸ்".. திமிங்கலத்தை கொக்கி போட்டு தூக்கிய பாஜக.. ஆடிப்போன திமுக.. அடடா
சென்னை: பாஜகவில் திமுகவிற்கு நெருக்கமான முக்கிய புள்ளி ஒருவர் இணைந்துள்ளார். அவரின் இந்த வருகை விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னையில் மின்ட் சாலையில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதில் பாஜகவின் சாதனைகளை பேசியவர் அதன்பின் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில்தான், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் நெருங்கிய உறவினரும், கர்நாடக மாநில பாஜக எம்.பி. சந்திர மோகன் அவர்களின் சம்பந்தியுமான அக்னி கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவருமான ஜே.பி. என்கிற ஜெயபிரகாஷ் நேற்று பாஜகவில் இணைந்தார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் நேற்று தமிழக பாஜகவில் இணைந்துள்ளார். சமீபத்தில்தான் முன்னாள் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என்று பழைய நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைந்தனர். தற்போது இவர் பாஜக பக்கம் வந்துள்ளார்.
எங்கே நிற்பார்: பாஜகவில் இப்படி புதிதாக இணையும் பலருக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.பி. என்கிற ஜெயபிரகாஷ் தென்சென்னை பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் இப்போதே கமலாலய வட்டாரங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது .
என்ன நடந்தது? இந்த நிலையில், சேகர்பாபுவிடம் இது குறித்து விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 1 மாதமாகவே ஜெ.பி.க்கும் சேகர்பாபுவுக்கும் தொடர்ச்சியாக கருத்துவேறுபாடுகள் நடந்துள்ளன என்கிறார்கள் திமுகவினர். ஆனால், சேகர்பாபுதான் ஜெ.பி.யை பாஜகவுக்கு போக வலியுறுத்தினார் என வடசென்னை திமுகவினர் மத்தியில் பரவி வருகிறது. பாஜகவில் ஜெ.பி. இணைந்திருப்பது சேகர்பாபுவுக்கு நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
பிரதமர் மோடி பிப்.25-ம் தேதி சென்னை வருகை புரிய உள்ளார். அதற்கு முன்பாக மேலும் பலர் இப்படி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாம்
பாஜக மூன்றாவது அணி; இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.

பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும்.
மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2-3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
விரும்பவில்லை; லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கி இருக்கும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமல் உருவாக்கப்படும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லையாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications