சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சியை விட்டு நீக்க வேண்டும்! ஓபிஎஸ்சுக்கு எதிராக மாஸ்டர் பிளானுடன் "மாஜி!" இதற்கா அவசர வெளிநடப்பு?

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் ஒற்றை தலைமை தொடர்பான வாக்கெடுப்பு பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடி வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், முன்னதாகவே கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

Recommended Video

    அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் 11.7.2022 அன்று நடைபெறும்

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற ரீதியில் தான் அதிமுக பொதுக்குழுவில் அமர்ந்திருக்கிறார், கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்ட ஓபிஎஸ் தற்போது அதே கட்சியைச் சேர்ந்த தொண்டர்களாலேயே கூட்டத்தை விட்டு வெளியேறவேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர்.

     ஜெயலலிதா இருந்த பதவியில் வேறு யாரும்? முட்டாள்தனம்.. ஓபிஎஸ் திமுக பி டீம்..விளாசிய அதிமுக நிர்வாகி! ஜெயலலிதா இருந்த பதவியில் வேறு யாரும்? முட்டாள்தனம்.. ஓபிஎஸ் திமுக பி டீம்..விளாசிய அதிமுக நிர்வாகி!

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவால் கைகாட்டப்பட்டு முதல்வராகவும் பின்னர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என அடுத்தடுத்து வளர்ச்சி கண்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது கட்சியின் தலைமைக்காக முன்னிறுத்தப்பட்டு இருக்கிறார். இதற்கான காய் நகர்த்தல்கள் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு செய்யப்பட்டு வந்தாலும் கடந்த ஒரு வாரமாக தான் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

     ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு

    ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு

    இந்நிலையில் அதற்கடுத்து ஓபிஎஸ் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் குறித்த தீர்மானங்களையோ, சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார் ஓபிஎஸ். இதற்காக காலையில் 9 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு காரணமாக சுமார் 11 மணி அளவிலேயே பொதுக்குழு கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு வந்தார் ஓபிஎஸ்.

    மேடையிலிருந்து வெளியேற்றம்

    மேடையிலிருந்து வெளியேற்றம்

    வெளியில் தென் மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த தொண்டர்கள் உற்சாக முழக்கம் இட்டாலும் மண்டபத்திற்கு சென்றதும் ஓபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மேடையில் கால் வைத்ததும் ஒற்றை தலைமை வேண்டுமென முழக்கங்களை எழுப்பி மண்டபத்திலேயே அதிர வைத்தனர் இபிஎஸ் ஆதரவாளர்கள். மேலும் ஒபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை துரோகியே வெளியே போ என கூறியதால் அவர் மேடையில் இருந்து வெளியேறினார்.

    அதிரடி திட்டம்

    அதிரடி திட்டம்

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேடையில் அமர்ந்திருந்த நத்தம் விசுவநாதன், கேபி முனுசாமி, வளர்மதி உள்ளிட்ட முன்னாள் ஆதரவாளர்கள் ஒன்றுமே தெரியாதது போல முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டதால் செய்வதறியாமல் திகைத்து நின்றார். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எதிர் முழக்கம் எழுப்பத் தொடங்கினார். இந்த நிலையில்தான் ஒற்றை தலைமையாகவும் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றாமல், வேறொரு நாளில் பொதுக்குழு கூட்டத்தை நிறைவேற்றி அதனை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும், தெரிவிக்க முடிவெடுத்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.

    உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு

    உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு

    அதேநேரத்தில் மற்றொரு திட்டமும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என பொது குழு உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன்படி வரவு செலவு கணக்கை ஓ பன்னீர்செல்வம் வாசித்துக் காட்டிய பின் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதனை அடுத்து ஒற்றை தலைமை வேண்டுமா வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்த முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகி ஒருவரும் தயாராக இருக்கிறார்.

    நிர்வாகிகள் குழப்பம்

    நிர்வாகிகள் குழப்பம்

    அதன்பிறகு ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தாவிய ஒரு மூத்த நிர்வாகியை வைத்தே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததாகவும், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கம் செய்ய வேண்டும் என பேச வைத்து அதன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தகவல் தற்போது காலையிலேயே வெளியான நிலையில், அதனை எப்படி எதிர்கொள்வது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியில் இருந்தது. இந்நிலையில் அதற்கு முன்னதாகவே ஓ.பன்னீர்செல்வமும், வைத்தியலிங்கமும் வெளியேறி விட்டனர்.

    English summary
    With the AIADMK general body and executive committee meeting in Chennai beginning, it has been reported that a former minister is to hold an action vote to remove O. Panneer Selvam from the party, with a single leadership vote. but OPS walkout from the general body meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X