தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! சும்மா இருந்த ஜிபி முத்துவை ஊதி கெடுத்த டிடிஎஃப் வாசன்! புது ட்ரெண்ட்!
சென்னை : பிரபல யூட்யூபரும் பைக்கருமான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது ஜிபி முத்துவுடனான அதிவேக பயணத்தின் காரணமாக மீண்டும் சிக்கலை சந்தித்திருக்கும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கையுடன் சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே டிடிஎஃப் வாசன் குறித்த பதிவுகள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. அவரது பிறந்தநாளுக்கு அவரைக் காண ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள் தான் தற்போது ஹாட் டாபிக்.
கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றியது அடுத்து அவருக்கு சுமார் 27 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமாகி வருகிறது.

டிடிஎஃப் வாசன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 243 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இதையடுத்து பலரும் அவரை சூப்பர் மேன் என கொண்டாடி வந்தனர். அதே நேரத்தில் அவரது செயல் கடுமையான கண்டனங்களைப் பெற்றது. இளைஞர்களை டிடிஎஃப் வாசன் தவறாக வழிநடத்துவதாகவும், இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

ஜிபி முத்துவுடன் பயணம்
சில நாட்கள் அமைதியாக இருந்த டிடிஎஃப் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பிரபல யூட்யூப் பிரபலமும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தோன்றி நடித்து ஜிபி முத்துவுடன் டிடிஎஃப் வாசன் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர் திசையில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கிடையே மின்னல் வேகத்தில் டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டியதோடு கைகளை விட்டு சாகசம் செய்திருக்கிறார் பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த நிலையில், "அலறிய ஜிபி முத்து தெறிக்க விட்ட டிடிஎஃப் வாசன்" என சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

கடும் சர்ச்சை
மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் இரு சக்கர வாகனத்தை டிடிஎஃப் இயக்கியது காண்போரை பதைபதைக்க வைத்தது. மின்னல் வேக பயணத்தின் போது ஜி.பி முத்து ஹெல்மெட் அணியாமல் பயணித்ததும் இவ்வளவு வேகமாக வண்டி ஓட்டியதும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் புகுந்த நிலையில் தற்போது இந்த வீடியோ மேலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இதை அடுத்து வாசனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்
#arrestttfvasan, #எப்போதுகைதாவார்வாசன்,#டிடிஎஃப்வாசனைகைதுசெய் உள்ளிட்ட பல ஹேஸ்டேக்குகள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே டிடிஎஃப் வாசன் மீது இதுபோன்ற பல புகார்கள் இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய தாமதம் ஏன் எனவும், பல இளைஞர்களை உசுப்பேற்றி அவர்களை சாலையில் சாகசம் செய்ய வைத்து பலரை சாகடிக்க துடிக்கும் வாசன் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை இன்று தயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கைது செய்யாவிட்டாலும் பரவாயில்லை இனிமேல் இதுபோன்ற சாகசங்களை சாலைகளில் செய்ய மாட்டேன் என்றாவது அவரை கூற வைக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications