சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டக் கல்லூரி மாணவர் மீது கொடுங்கையூர் போலீசார் சிறுநீர் கழித்ததாக திடுக் புகார்! காவல்துறை மறுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே முகக்கவசம் அணியவில்லை எனக் கூறி சட்டக் கல்லூரி மாணவரை போலீஸார் விடிய விடிய தாக்கியதாகவும் அவர் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், போலீசார் இதனை மறுத்துள்ளனர்.

Recommended Video

    சட்டக் கல்லூரி மாணவர் மீது கொடுங்கையூர் போலீசார் சிறுநீர் கழித்ததாக திடுக் புகார்! காவல்துறை மறுப்பு

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வியாசர்பாடி அருகே உள்ள புது நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    வண்டலூர் பூங்காவில் 70 பேருக்கு கொரோனா- ஜன. 31 வரை மூடல்.. 5 வயது சிங்கமும் உயிரிழந்ததால் பரபரப்புவண்டலூர் பூங்காவில் 70 பேருக்கு கொரோனா- ஜன. 31 வரை மூடல்.. 5 வயது சிங்கமும் உயிரிழந்ததால் பரபரப்பு

    கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி இரவு நேரங்களில் கடைகளில் பகுதி நேர வேலையும் செய்து வந்திருக்கிறார்.

    சட்டக் கல்லூரி மாணவர்

    சட்டக் கல்லூரி மாணவர்

    நேற்று இரவு முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்ததாகவும் அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சாலையில் நடமாடும் போது முக கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டும் 6 போலீசாரையும் கூறியதாகவும் அதற்கு தான் முகக்கவசம் அணிந்து தான் வந்துள்ளேன் அதனால் அபராதம் கட்ட முடியாது என கூறியதாகவும் இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

    தாக்குதல் எனப் புகார்

    தாக்குதல் எனப் புகார்

    வாக்குவாதம் முற்றியதில் காவலரை அடிக்க முயன்றதாக கூறி அவரை காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் இரவு ஒரு மணியிலிருந்து காலை 11 மணி வரை போலீசார் தன்னை அடித்து தாக்கியதுடன் தனது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தனது முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் மேலும் நேற்று இரவுதான் முகக்கவசம் அணிந்து வந்த போது தான் லஞ்சம் பெறும் முயற்சியில் போலீசார் அபராதம் கட்ட சொல்லியதாகவும் தனது அடையாள அட்டைகளையும் அவர்கள் தன்னை விட வில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    கண்டனம் வலுக்கிறது

    கண்டனம் வலுக்கிறது

    மேலும் காவல் நிலையத்தில் தன்னை இரவு முழுவதும் கொடூரமாக அடித்து உதைத்த தோடு சுவற்றிலும் விட்டதால் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டதாகவும் இரவு முழுவதும் தன்னை அடித்து உதைத்து அதோடு தன்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மாணவர் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் அவரை விடுதலை செய்ய வேண்டும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

    போலீசார் மறுப்பு

    போலீசார் மறுப்பு

    அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், மாணவர் மீது சிறுநீர் கழிப்பதாக வெளியாகும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என்றும் இருந்தும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ள போலீசார் சம்பவம் நடந்ததாக தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

    English summary
    Police have denied allegations that a law college student was assaulted and urinated in his face for not wearing a mask near Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X