முதுகுல குத்திட்டாங்க.. ’பப்பு’ ராகுல்! தவெகவில் துண்டு போட்ட காங்கிரஸ்! திமுகவுக்கு வந்த கோபம்!
சென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியுள்ளதாக கே.சி. வேணுகோபால் கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர்முதுகில் குத்துபவர்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களை கைப்பற்றியது திமுகவால் தான் எனவும், ராகுல் காந்தியை "பப்பு" என்று பாஜக/ஆர்எஸ்எஸ் ட்ரோல் செய்யும் போது அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் என திமுகவின் சரவணன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இன்னும் சூசற்று சூடாகவே இருக்கிறது. 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற பெரும்பான்மை எட்டப்படாததால், கூட்டணி அரசியல் தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில், கட்சித் தலைவர் விஜய் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

தவெக விஜய்
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியிடம் நேரடியாக ஆதரவு கோரியுள்ளதாக அந்தக் கட்சியின் முக்கிய தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் ஆதரவு கோரியுள்ளார். இந்த கோரிக்கையைவும், மக்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு, தமிழக காங்கிரஸ் உரிய முடிவெடுக்கும்" என்று கூறினார். மேலும், மதச்சார்பற்ற அரசு அமைவது முக்கியம் என்றும், பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சி வரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் ஆதரவு
இதன் மூலம், காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆதரவு அளிக்க தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு மறைமுகமான சிக்னல் கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த ஆதரவு கிடைத்தால், விஜய்க்கு பெரும்பான்மைக்கான மேஜிக் எண்ணை எட்டுவது எளிதாகிவிடும்.
திமுக எதிர்ப்பு
ஆனால் , திமுக தரப்பில் கடும் எதிர்வினையும் எழுந்துள்ளது. திமுகவின் பேச்சாளர் சரவணன், காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். "காங்கிரஸ் கட்சியினர்முதுகில் குத்துபவர்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களை கைப்பற்றியது திமுகவால் தான் எனவும், ராகுல் காந்தியை "பப்பு" என்று பாஜக/ஆர்எஸ்எஸ் ட்ரோல் செய்யும் போது அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் " என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இதன் மூலம், கூட்டணி தர்மம் குறித்து கேள்வியை திமுக எழுப்பியுள்ளது.
விஜய்க்கு ஆதரவு
இந்நிலையில், விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து இன்னும் எந்த கட்சியின் இறுதியான முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் மட்டுமின்றி, இடதுசாரி கட்சிகள், தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து கட்சிகளும் சேர்ந்து வந்தால், விஜய் தலைமையிலான அரசு அமைவது சாத்தியமாகும்.
தவெக - அதிமுக பேச்சு
அதே நேரத்தில், அதிமுக கூட அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்துகளும் நிலவுகின்றன. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமா என்பது இன்னும் தெரியவில்லை. தமிழக வெற்றி கழகம் - அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சுமூகமான முடிவு விரைவில் எட்டப்படும் என லால்குடி அதிமுக எம்எல்ஏ ஆன லீமா ரோஸ் சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும். விஜய்க்கு ஆதரவு கிடைக்குமா, அல்லது அரசியல் களம் மொத்தமாக மாறி மீண்டும் தேர்தல் நடக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.














Click it and Unblock the Notifications