சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடும்ப பெண்கள் தான் ’டார்கெட்’! செல்போனில் வலைவிரிக்கும் கிரைம் கும்பல்! போனா வராது.. கவனம் மக்களே!

Google Oneindia Tamil News

சென்னை : வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், குடும்பத் தலைவிகளுக்கு அரிய வாய்ப்பு என வாட்ஸ் அப்பில் பெண்களை குறி வைத்து அனுப்பப்படும் லிங்குகளை திறக்க வேண்டாம் எனவும் இதனால் வங்கி கணக்குகளில் உள்ள பணம் மாயமாகும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

செல்போன் யுகத்தில் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு எப்படி புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறதோ அந்த வகையில் மக்களிடம் இருந்து ஆட்டைய போடுவதற்கென்றே நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

கார்டு மேல இருக்க 16 நம்பர் சொல்லு, வெளிநாட்டில் இருந்து கிப்ட் வருகிறது, உங்கள் செல்போன் எண்ணுக்கு பரிசு விழுந்துள்ளது என நம்பியார் காலத்துக்கு டெக்னிக்குகள் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பணம்..துணி வைக்கும் அலமாரியில் இந்த பொருட்களை மறந்தும் கூட வைத்து விடாதீர்கள்..வறுமை ஏற்படலாம்!! பணம்..துணி வைக்கும் அலமாரியில் இந்த பொருட்களை மறந்தும் கூட வைத்து விடாதீர்கள்..வறுமை ஏற்படலாம்!!

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி

இதையெல்லாம் பார்த்து சலித்துப்போன மக்கள் உஷாராகி விட்ட நிலையில் தற்போது வாட்ஸ் அப் லிங்குகளை அனுப்பி ஹேக் செய்து வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது, வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என பெண்களை ஏமாற்றி பணம் திருடுவது, ஆன்லைன் லோன் ஆப்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டுவது என மோசடி பேர்வழிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு குற்றத்தை கண்டுபிடித்து அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மற்றொரு ரூட்டில் மோசடி நபர்கள் பணத்தை திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 சைபர் கிரைம்

சைபர் கிரைம்

ஆன்லைன் குற்றங்களை தடுப்பதற்கு எனவே சைபர் கிரைம் என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டாலும் தற்போது வரை அவற்றை முற்றாக ஒழிக்க முடியவில்லை. சொல்லப்போனால் நாளுக்கு நாள் இவ்வகை குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என குடும்பப் பெண்களை குறி வைத்து பணத்தை லட்சக்கணக்கில் திருடும் மோசடி கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மோசடி கும்பல் வலை

மோசடி கும்பல் வலை


தற்போது கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத் தலைவிகளின் செல்போன் எண்களுக்கு வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் இந்த லிங்கை ஓபன் செய்து 10 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என மோசடி கும்பல் வலை விரிக்கிறது. அதனை திறக்கும் போதே செல்போனில் இருக்கும் ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வங்கி கணக்கிலிருந்து உடனடியாக பணம் கொள்ளை போகிறது.

 போலீசார் எச்சரிக்கை

போலீசார் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல ஒரு பெண்ணிடம் ஏழரை லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரியிலும் ஒரு பெண் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தேவையின்றி வரும் லிங்குகளை ஓபன் பண்ண வேண்டாம் எனவும் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது மிக கவனமுடன் இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

English summary
Cybercrime police have warned against opening links sent to women on WhatsApp as a rare opportunity for housewives to earn money from home, as money in bank accounts will disappear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X