போச்சு.. விஜய்க்கு விஜயபாஸ்கர் ஆதரவு? ரெடியாகும் புதுக்கோட்டை டீம்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனே அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தனி பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக உருவாகி இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என அதிமுகவினர் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே சிவி சண்முகம் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்ட புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் விஜய்க்கு ஆதரவு தர இருப்பதாகவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விரைவில் அவரை சந்திக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தான் தற்போது தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விஷயம். 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் தனிப் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது.

AIADMK C Vijayabaskar Vijay

108 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி இருக்கும் நிலையில் ஆட்சி அமைக்க கூடுதலாக 10 எம்எல்ஏக்கள் தேவை. தற்போதைய சூழலில் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தரும் கடிதத்தில் கையெழுத்திட்டு விட்டது. இதனால் தற்போதைக்கு விஜய்க்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது.

இதுமட்டும் அல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என போர்க் கொடி தூக்கி இருக்கின்றனர்.

பாஜக கூட்டணியால் தான் பல முன்னால் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே அதிமுக தவெக கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. இந்த நிலையில் திமுக-வை ஆட்சியை விட்டு அகற்றி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என சிவி சண்முகம் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.

அவருடன் எஸ் பி வேலுமணியும் இணைந்து நிலையில் இப்போதைக்கு 10 எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் தரப்புடன் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர் விஜயை பனையூர் இல்லத்தில் சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை சி விஜயபாஸ்கர் விஜய் தரப்புக்கு ஆதரவு தர இருப்பதாக சொல்லப்படுகிறது.

தனக்கு நெருக்கமான எம்எல்ஏக்களுடன் அவர் விரைவில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதிமுகவின் முக்கிய முகங்களாக இருக்கும் மூன்று முன்னாள் அமைச்சர்கள் தனக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+