டெல்லியில் பிளைட் ஏறும் டாப் தலை.. தமிழ்நாட்டிற்கு விரைகிறார்! எடப்பாடிக்கு செக் வைக்கும் பாஜக சக்தி
சென்னை: அதிமுக உட்கட்சி மோதல், பாஜக - அதிமுக கூட்டணி மோதல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை நடத்த டெல்லியில் இருந்து ஒரு பாஜக தலை தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் கடந்த சில காலமாக தீவிர ஆர்வம் காட்டி வரும் அந்த பெண் தலைவர் விரைவில் தமிழ்நாடு வரலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக உள்ளேயும், அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையிலும் ஏற்பட்டு உள்ள மோதலால் தொடர்பாக டெல்லி பாஜக தீவிரமாக கவனித்து வருகிறதாம். டெல்லி தலைமை இதில் விரைவில் நேரடியாக தலையிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

அதிமுகவில் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த பத்து நாட்களுக்குள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து கட்சியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். தனது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரைகளில் பங்கேற்பேன் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், டிடிவி தினகரனின் இந்த விலகல் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
அதிமுக டெல்லி பிளான்
அதிமுகவுக்குள் உள்ள அதிருப்தி குரல்களைப் பெரிதாக்குவதன் மூலம், எடப்பாடியை கட்டுப்படுத்த முடியும் என்று பாஜக நினைக்கிறதாம். இதற்காக ஒரு பெரிய பாஜக புள்ளி களமிறங்கி பணிகளை செய்து வருகிறாராம். அவர் போட்ட உத்தரவில்தான் தற்போது அதிமுகவில் களேபரம் அதிகரித்து உள்ளது.
அதிமுகவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சலசலப்பால் தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிதலைமையில் அதிருப்தியில் இருப்பது உறுதியாகி உள்ளது. இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையனின் அதிருப்தியை ஒரு பேரம்பேசும் கருவியாக பாஜகவினர் பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையனை வைத்து எடப்பாடிக்கு பிரஷர் கொடுக்க டெல்லி திட்டமிட்டு வருகிறதாம். இதன் இபிஎஸ்ஸை அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்க பாஜக வற்புறுத்தக்கூடும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து வரும் தலை
இபிஎஸ்ஸைப் பொறுத்தவரை, செங்கோட்டையன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், மேற்கு மண்டலத்தில் உள்ள தொண்டர்கள் கோபம் அடையாளம். எனினும், அவரது எதிர்ப்பை புறக்கணித்தால், மற்ற தலைவர்கள் தலைமை குறித்து கேள்வி எழுப்பலாம். இத்தகைய சூழ்நிலையில், பாஜகவின் அதிக தொகுதிகளுக்கான கோரிக்கை தவிர்க்க முடியாதது ஆகும். எடப்பாடிக்கு இப்படி நெருக்கடி கொடுத்து.. அவரை வழிக்கு கொண்டு வரவே அந்த பெரிய பாஜக புள்ளி களமிறங்கி பணிகளை செய்து வருகிறாராம்.
அதிமுக உட்கட்சி மோதல், பாஜக - அதிமுக கூட்டணி மோதல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை நடத்த டெல்லியில் இருந்து அந்த பாஜக தலை தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் கடந்த சில காலமாக தீவிர ஆர்வம் காட்டி வரும் அந்த பெண் தலைவர் விரைவில் தமிழ்நாடு வரலாம் என்று கூறப்படுகிறது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications