ஹே பிரபு.. என்ன நடக்குது இங்கே? கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்! ஆள் இல்லா நேரத்தில் ஷாக்! டிரெண்டான ரீல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அந்த பகுதியில் இடிபாடுகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில் இதற்கான டெண்டர் விடுபடலாம் என்று கூறப்படுகிறது.இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அங்கே ஆள் இல்லாத நேரத்தில் ஆண்கள், பெண்கள் சிலர் அத்துமீறும் காட்சிகள் வெளியாகி உள்ளன. ஒரு காலத்தில் அங்கே பல லட்சம் பயணிகள் இருந்தனர்.

ஆனால் இப்போது அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் இல்லை. இந்த நிலையில்தான் அதை பயன்படுத்திக்கொண்டு அங்கே ஆண்கள், பெண்கள் சிலர் அத்துமீற தொடங்கி உள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் ரீல்சாக வெளியாகி உள்ளது.

koyambedu

என்ன கட்டுமானம்: இதற்கு இடையே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன.

ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.

இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. ஐடி நிறுவனம்; இந்த நிலையில்தான் இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும். மெட்ரோ இணைப்புடன், நிரந்தர திறந்தவெளி சந்தையை உருவாக்க உள்ளனர். மிகப்பெரிய ஃபுட் பிளாசா மற்றும் கிராஃப்ட் பஜார் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான கட்டிடங்களை உருவாக்க CMDA திட்டமிட்டுள்ளது.

16 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் பேருந்து நிலையம் பூங்காவாக மேம்படுத்தப்படும். பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் . அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கிளாம்பாக்கம்: கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சத்விகிக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேருந்து நிலைய தூய்மை: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.

இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றன. 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Take a Poll

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்ததாலும், பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்திய சம்பவங்களாலும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கோயம்பேடு பேருந்து நிலைய பகுதிக்கு அரசின் திட்டங்கள் என்ன?
கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதியை இடித்து, பெரிய உணவுத் திடல், கைவினைப் பஜார், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கான கட்டிடங்கள் உள்ளிட்ட கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
கோயம்பேடு தளத்தில் என்ன புதிய வளர்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன?
கோயம்பேடு தளத்தில் புதிய மேம்பாடுகளில் குடியிருப்பு வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான வசதிகள், விளையாட்டு அரங்கம், உயரமான கட்டிடம் மற்றும் தனியார் பேருந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவது ஆகியவை அடங்கும்.
புதிய கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை எவ்வாறு பாதிக்கும்?
2023 டிசம்பரில் திறக்கப்பட்ட கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், ஜனவரி 2024 முதல் தென் மாவட்டங்களுக்கு 90 சதவீத அரசுப் பேருந்துகளை இயக்குவதன் மூலம் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும்.
கிளாம்பாச் பேருந்து நிலையத்தின் நிர்வாகத்தின் தனித்தன்மை என்ன?
தமிழக வரலாற்றில் முதன்முறையாக, விமான நிலைய மாதிரியை போன்று உலகத்தரம் வாய்ந்த தரத்தை பராமரிக்கும் நோக்கத்தில், கிளாம்பாச் பேருந்து நிலையத்தின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு தனியார் நிறுவனத்திற்கு நியமிக்கப்படும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+