மதுபோதை..புத்தி சொன்ன தந்தையையே குத்திக் கொலை செய்த மகன்.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையில், மது குடிக்க கூடாது என்று அறிவுரை வழங்கிய தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சூளை பள்ளம் வெங்கட்ராமன் தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(48).
இவர் ஜாபர்கான்பேட்டை கல் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் பிரகாஷ்(21). பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். எப்பவாவது மட்டும் பெயிண்டிங் வேலைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

மேலும், மதுபோதைக்கு அடிமையான பிரகாஷ், மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி தந்தையை நச்சரித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. '' மது உனது வாழ்க்கையை மட்டுமின்றி, மொத்த குடும்பத்தையும் சீரழித்து விடும். எனவே மது குடிப்பதை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்'' என்று செல்வம் தனது மகனிடம் அடிக்கடி அறிவுரை வழங்கி வந்தார்.
ஆனால் தந்தையின் வார்த்தையை காதில் ஏற்றிக் கொள்ளாத பிரகாஷ் வழக்கம்போல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மீன் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் செல்வம். இதேபோல் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் பிரகாஷ். அப்போது செல்வம் குடியை நிறுத்தும்படி அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரகாஷ், தந்தை என்றும் பாராமல் கத்தியை எடுத்து செல்வத்தின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தந்தையை குத்தி கொலை செய்த பிரகாஷை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மது என்னும் அரக்கன் தந்தையின் உயிரை பறித்து மகனை கொலைகாரனாக்கி உள்ளது. தமிழகத்தில் மதுபோதையில் இதுபோல் குற்றச் செயல்கள் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மதுக்கடைகளை பாதியளவு குறைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications