பெரிய பதவி.. பெரிய தூண்டில்.. சிக்கிய திமிங்கலம்.. அதிமுகவை ஆட வைக்க போகும் திமுகவின் மாஸ்டர் பிளான்
சென்னை: அதிமுகவில் உள்ள எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என்று இரண்டு அணியையும் அதிர வைக்கும் சம்பவம் ஒன்றை செய்ய திமுக திட்டமிட்டு வருவதாக, அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்து உள்ளது. ஒற்றை தலைமைதான் வேண்டும். கட்சி ஒற்றை தலைமைக்கு கீழ் இருந்தால்தான் வெற்றிபெறும்.
கடந்த சட்டசபை தேர்தலில் ஒற்றை தலைமை இருந்திருந்தால் வெற்றிபெற்று இருக்கும். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இருந்ததால் அது சாத்தியம் ஆகவில்லை. அதனால் நான் ஒற்றை தலைமைக்கு பதவி ஏற்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்போ.. ஒற்றை தலைமையை ஏற்கும் அளவிற்கும் எடப்பாடிக்கு மக்கள் ஆதரவு இல்லை. ஒரு மண்டலத்தில் மட்டும் ஆதரவை வைத்துக்கொண்டு அவர் அதிமுகவை கட்டுப்படுத்த முடியாது. அது தவறு. அதிமுக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு கீழ் அதிமுக ஒருங்கிணைந்த நிலையில் இருந்தது. அதைத்தான் அதிமுக தொண்டர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். அது போல ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும். அதனால் ஒற்றை தலைமை இருக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து வருகிறது.

உட்கட்சி பூசல்
இந்த உட்கட்சி பூசல் காரணமாக அதிமுகவில் பல சீனியர் தலைவர்கள் அப்செட் ஆகி உள்ளனர். அதிமுகவில் இவர்கள் மோதிக்கொள்வதால் கட்சியின் எதிர்காலம் காலியாகிவிட்டது. இனிமேலும் அதிமுகவில் இருந்தால், கட்சிக்கு எதிர்காலம் இருக்காது. எங்களுக்கும் எதிர்காலம் இருக்காது. இவர்களின் மோதல் இப்போதைக்கு முடிவிற்கு வராது. எப்படியும் பாஜகவிற்கு கீழ்தான் அதிமுக இருக்க போகிறது. அதனால் அதிமுகவில் இருப்பதை விட வெளியேறுவதுதான் சரியாக இருக்கும். இனிமேலும் அதிமுகவில் நீடிக்க விரும்பவில்லை என்ற முடிவிற்கு நிர்வாகிகள் பலர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. பல சீனியர்கள் இந்த மோதல் காரணமாக அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

மாற்றம்
இதற்கு முன்பே அதிமுகவில் இருந்து பல டாப் தலைவர்கள் வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர். கோஷ்டி மோதலில் சிக்க விரும்பாத பலர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டனர். இந்த நிலையில்தான் கோவை செல்வராஜ் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து வெளியேறினார். அதோடு மொத்தமாக அதிமுகவில் இருந்தும் வெளியேறுவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். இவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஒற்றை தலைமை மோதலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் கோவை செல்வராஜ். அதிமுகவில் தலைவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கோவை செல்வராஜ் தீவிரமாக கருத்து தெரிவித்து வந்தார்.

மோதல் வெளியேற்றம்
ஆனால் அவரே தற்போது அதிமுகவில் இருந்து விலகி இருக்கிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கொங்கில் இருக்கும் வெள்ளாள கவுண்டர்கள் அல்லாத மற்ற ஜாதியினர் பலர் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த டாப் நிர்வாகி ஒருவரும் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருப்பவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அவர் திமுகவில் இன்னும் 10 நாட்களில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதவி
அதிமுகவில் இருந்து திமுகவில் இணையும் நபர்கள், மாற்று கட்சியினர் என்று பலருக்கு திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூட நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக நிர்வாகிகள் பலருக்கு பெரிய போஸ்டிங் வழங்கப்பட்டது. அதேபோல்தான் அதிமுகவில் இருக்கும் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த டாப் நிர்வாகி ஒருவரும் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிர்வாகிக்கும் மிக முக்கிய பொறுப்பை தென் மாவட்டத்தில் திமுக தர உள்ளதாம். இந்த சம்பவம் நடந்தால் அதிர்ச்சியில் இருக்கும் அதிமுக மேலும் போகும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications