எடப்பாடி நிகழ்த்திய அதிசயம்.. அதிமுகவில் முதல் முறை.. பெண் ஒருவருக்கு கிடைத்த 'மாஸ்' பதவி
சென்னை: அதிமுகவில் முதல் முறையாக மாவட்ட செயலாளராக பெண் ஒருவரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திற்குத்தான் மாவட்ட செயலாளராக பெண் ஒருவரை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருந்தார். அதன்படியே அமைப்பு ரீதியாக அதிமுகவின் மாவட்டங்கள் 75-ல் லிருந்து 82 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட போது, அவருடன் ஐந்து மாவட்ட செயலாளர்கள் சென்றனர். அவர்களுக்கு பதிலாக
புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி தேனி மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி.ஜக்கையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டச் செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை ரா. தமிழ்ச்செல்வன், குமரி மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை போளூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த எல்.ஜெயசுதா, திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் அதிமுகவில் முதல் முறையாக பெண் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஜி.பாஸ்கரன், அன்வர் ராஜா, ஆர்.மனோகரன், வி.ராமு, ராயபுரம் மனோ, துரை செந்தில் உள்ளிட்டோர் அதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் சரவணனை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இன்பதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications