ப்பா இதுதான் துணிச்சல்! நான் "அங்கதான்" வேலை பார்க்கிறேன்! தைரியமாக சொன்ன பெண்.. குவியும் பாராட்டு
சென்னை: நாடு முழுவதும் வேலை தேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தனியார் வலைதளமான LinkedIn-ல் பெண்மணி ஒருவர் தன்னுடைய வேலை குறித்த சுயவிவரத்தில் பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டு அப்டேட் செய்துள்ளார். இது தொடர்பான ஸ்கீரீன் ஷாட் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. பட்டதாரியான லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலையும் சூழுல் உருவாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கூட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் பலர் வேலை வாய்ப்பு தளங்களில் விண்ணப்பித்து காத்து கிடக்கின்றனர்.

பெண்மணி
அந்த வரிசையில் தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் தளமான LinkedIn-ல் பெண்மணி ஒருவர் தனது சுயவிவரத்தை பதிவிட்டிருந்தார். இதில் ஆச்சர்யமடைய என்ன உள்ளது என கேட்கிறீர்களா? அந்த பெண்மணி தன்னை பாலியல் தொழிலாளி என அடையாளப்படுத்தியுள்ளார். இது தற்போது பல சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.உழைப்பு சுரண்டல் அதிகம் காணப்படும் வேலைகளில் பாலியல் தொழிலும் ஒன்று.

உழைப்பு சுரண்டல்
அதுமட்டுமல்லாது இந்தியா போன்ற ஒரு நீண்ட பண்பாட்டு பாரம்பரியமிக்க நாடுகளில் இம்மாதிரியான தொழில்கள் இழிவாக கருதப்படுவதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொழில் மட்டுமல்லாது அதில் ஈடுபடும் தொழிலாளர்களும் இவ்வாறே மதிப்பிடப்படுகின்றனர். அவர்களுக்கான சுய உரிமை பல இடங்களில் மறுக்கப்படுவதை அன்றாட செய்திகளில் நாம் கடந்து செல்கிறோம். இவ்வாறான சூழலில் பாலியல் தொழில்தான் எனது வேலை என பெண் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்ததுடன் ஏன் அவ்வாறு தான் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளேன் என்பதற்கும் அந்த பெண்மணி விளக்கமளித்துள்ளார்

விளக்கம்
அமெரிக்காவை சேர்ந்த அரிசில் எக்கோன்சி என்ற அந்த பெண் தான் 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு ஆடம்பரமான வேலையிலிருந்து வெளியேறியதாகவும் அதன் பின்னரே பாலியல் தொழிலில் நாட்டம் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். எதையாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்பில் இந்த தொழிலுக்கு நுழைந்தாலும் உறுதியாக இதில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய பணிக்கு அதிக தொகையை தான் வசூலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தன்னிடம் வேலைக்கான உரிய தொகை தராதபட்சத்தில் அதை பிரச்னையாக கணக்கில் கொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏன் நாட்டம்?
அதேபோல தனது பணியில் தனக்கான எல்லையை தான் வகுத்து வைத்துள்ளதாகவும், பாதுகாப்பாக பணியை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், சுயமாக தான் இந்த பணியை செய்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இப்படி பொது வெளியில் தன்னுடைய வேலை குறித்த விவரங்களை பகிர்ந்ததற்கு முக்கிய காரணமாக சுயமரியதையை குறிப்பிட்டுள்ளார். பாலியல் தொழில் செய்யும் நான் குறைந்தபட்ச மரியாதையுடனும், அன்பு மற்றும் நன்றியுடனும் நடத்தப்பட வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராட்டு
இந்த பெண்மணியின் துணிச்சலை பலரும் பாராட்டி கருத்துகளை தெரிவித்துள்ளனர். பலரும் இவரின் ப்ரோபைலை ஷேர் செய்து வருகிறார்கள். முன்னதாக கடந்த மாதம் பாலியல் தொழிலாளர்கள் குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு சில அறிவுரைகளை வழங்கியது. இத்தொழிலில் ஈடுபடுவோர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications