நீல நிற ஆதார் கார்டு என்றால் என்ன? எப்படி வாங்குவது? ஏன் இந்த கார்டு அவசியம்
சென்னை: 2018 ஆம் ஆண்டில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 5 வயது உடைய குழந்தைகளுக்கு நீல நிறத்தில் உள்ள 'பால் ஆதார்' அட்டையை அறிமுகப்படுத்தியது. வழக்கமான வெள்ளை ஆதார் அட்டை போலல்லாமல். 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட இந்த நீல ஆதார் அட்டை குழந்தை 5 வயதை கடந்தவுடன் செல்லாது.
வழக்கமான ஆதார் அட்டையை உருவாக்குவதற்கான நடைமுறையைப் போலவே, பெற்றோரும் தங்கள் குழந்தையை பதிவு செய்ய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். அத்துடன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, உறவின் சான்று, குழந்தை பிறந்த தேதி போன்ற ஆவணங்களுடன் சென்று இ சேவை மையத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்
ஒரு நீல ஆதார் அட்டை வழக்கமான ஆதார் அட்டையை விட பல வழிகளில் வேறுபட்டது. இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது என்ற வெளிப்படையான உண்மையைத் தவிர, இரண்டு ஆதார் அட்டைகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், 'பால் ஆதார்' அட்டையில் குழந்தையின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்காது.

15 வயது
இருப்பினும், குழந்தை 5 வயதைத் தாண்டியவுடன், பயோமெட்ரிக்ஸ் அடையாளங்களுடன் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும் அதைத் தொடர்ந்து 15 வயதில் டீன் ஆதார் அட்டைதாரர்களுக்கான பயோமெட்ரிக்கையும் புதுப்பிக்க வேண்டும்.

எப்படி வாங்குவது
எப்படி நீல நிற ஆதார் அட்டை வாங்குவது என்பதை இப்போது பார்ப்போம். UIDAI வெளியிட்ட தகவலின் படி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீல ஆதார் அட்டைக்காக அவர்களைப் பதிவு செய்யலாம். அதேபோல் பெற்றோர் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் சீட்டை ஆவணமாக பயன்படுத்தி 'பால் ஆதார்' அட்டையை வாங்கலாம்.

இ சேவை மையம்
உங்கள் குழந்தைக்கு நீல ஆதார் பெறுவதற்கான சில வழிமுறைகளை இங்கே விவரிக்கிறேன். படி 1: உங்கள் குழந்தையுடன் இசேவை மையத்திற்குச் செல்லுங்கள். பிறந்த சான்றிதழ் அல்லது பள்ளி அடையாள அட்டை உள்பட அரசு குறிப்பிட்ட தேவையான ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.. நீங்கள் இ சேவை மையத்தை அடைந்தவுடன், அங்கு பால் ஆதார் அட்டைக்கான பதிவு படிவத்தைப் பெற்று நிரப்ப வேண்டும்

60 நாளில் வரும்
படி 2: பெற்றோரின் ஆதார் குழந்தையின் UID உடன் கேட்கப்படுவதால் , உங்கள் ஆதார் அட்டையை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். படி 3: நீல ஆதார் அட்டை வழங்கப்படும் ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுக்கும்படி கேட்கப்படுவீர்கள். படி 4: பயோமெட்ரிக் தகவல் தேவையில்லை என்பதால், ஒரு புகைப்படம் மட்டுமே கிளிக் செய்யப்படும். அதன்பிறகு உறுதிப்படுத்தல் செயல்முறை தொடங்கும். படி 5: ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, சரிபார்ப்பு முடிந்ததைப் பற்றிய செய்தியை மொபைலில் பெறுவீர்கள். சரிபார்ப்பு முடிந்த 60 நாட்களுக்குள், உங்கள் குழந்தைக்கு நீல ஆதார் அட்டை வழங்கப்படும்.

நீல நிற ஆதார்
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளுக்கு முதல் கொண்டு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், கல்லூரிகளில் என பல இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைஅடையாள சான்றாக மட்டும் அல்லாது, பல் நோக்கங்களுக்கான மத்திய அரசு கட்டாயமாக்கி வருகின்றது. உங்கள் குழந்தை பெயருக்கும் சேர்த்து ரேஷனில் பொருட்கள் வாங்கவும் , பள்ளியில் குழந்தையை சேர்க்கவும் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு அவசியமாகிறது.












Click it and Unblock the Notifications