சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிஜத்தில் நடந்த காற்று வெளியிடை.. கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் அபிநந்தனின் அப்பா

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!- வீடியோ

    சென்னை: மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் ஆலோசகராக செயல்பட்டிருப்பார் ஏர் மார்ஷல் வர்த்தமான். இவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்டுள்ள விங் கமாண்டர் அபிநந்தனின் தந்தைதான் வர்த்தமான்.

    காற்று வெளியிடை படத்தில் நடந்த காட்சிகள் இன்று வர்த்தமான் குடும்பத்தில் அரங்கேறியிருப்பது அவர்கள் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

     Abhinandans father worked as a consultant for Kaatru veliyidai movie

    காற்று வெளியிடை படத்தின் நாயகன் கார்த்தி கார்கில் போரின்போது தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் போய் மாட்டிக் கொள்வார். அவரை பாகிஸ்தான் படையினர் சிறை பிடித்து சித்திரவதை செய்வார்கள். இந்தப் படத்திற்கு இந்தக் காட்சிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டவர்தான் வர்த்தமான். இன்று இதே போல இவரது மகனுக்கும் நடந்திருக்கிறது.

     Abhinandans father worked as a consultant for Kaatru veliyidai movie

    பாதுகாப்புப் படையில் பணி புரிபவர்களுக்கு அதிலும் போர்க்காலங்களில், எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவோருக்கு எதுவுமே உத்தரவாதம் இல்லை. இதை ஒவ்வொரு பாதுகாப்புப் படையினரும், அவர்களது குடும்பத்தினரும் நன்கு உணர்ந்தவர்கள்தான். போருக்கு போவது மட்டும்தான் உறுதியாக தெரியும். ஆனால் திரும்பி வருவதை யாரும் சொல்லவே முடியாது.

     Abhinandans father worked as a consultant for Kaatru veliyidai movie

    ஆனால் ஒரு சினிமாவில் நடந்த காட்சி அபிநந்தனின் வீட்டில் நடந்திருப்பது நிச்சயம் துரதிர்ஷ்டவசமானது. அதை விட அந்தப் படத்தில் ஆலோசகராக தந்தை செயல்பட்ட நிலையில் மகன் அதேபோன்ற காட்சி சூழலில் சிக்கியிருப்பது பெரும் வேதனையாக இருக்கிறது.

    <strong>போருக்கு தயாராகிறதா இந்தியா...? காஷ்மீர் மருத்துவமனைகள் மீது செஞ்சிலுவை சின்னம் </strong>போருக்கு தயாராகிறதா இந்தியா...? காஷ்மீர் மருத்துவமனைகள் மீது செஞ்சிலுவை சின்னம்

    கார்த்தி வருத்தம்:

    காற்று வெளியிடை படத்தின் நாயகன் கார்த்தி அபிவநந்தன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், இந்திய விமானப்படையின் மிகச் சிறந்த பைலட்டுகளை நான் சந்திக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது. அவர்களில் பலரை நான் படத்திற்காக சந்திக்க நேர்ந்தபோது மிகவும் பெருமைப்பட்டேன். அது மிகப் பெரிய கெளரவம். நமது வீரர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ஒவ்வொரு இந்தியரின் உணர்விலும் இன்று அபிநந்தன் துடித்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம் அவர் பத்திரமாக தாயகம் திரும்புவார் என்ற நம்பிக்கை அத்தனை பேரிடத்திலும் உள்ளது.

    English summary
    Captured IAF pilot Abhinandan's father Air Marshal Varthaman had worked as a consultant for Kaatru Veliyidai where Pakistan captures hero Karthi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X