சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆக்‌ஷன்".. ஒருத்தரையும் விடாதீங்க.. லிஸ்ட் எடுத்த காடேஸ்வரா சுப்ரமணியம்.. ஸ்டாலினுக்கு எகிறிய புகார்

இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியன் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையை களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் நடந்துள்ள சில சம்பவங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஒரு அறிக்கையும் வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலினிடமும் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

மடாதிபதிகள் மனம் வருந்துவது அரசுக்கு நல்லதல்ல.. பாடம் புகட்டுவோம்.. காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டம்! மடாதிபதிகள் மனம் வருந்துவது அரசுக்கு நல்லதல்ல.. பாடம் புகட்டுவோம்.. காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டம்!

 விசிக ஊர்வலம்

விசிக ஊர்வலம்

"சமீபத்தில் அரசு நிலத்தையும், அருகில் இருந்த தனியார் இடத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்தது ஆரணி காவல்துறை. காவல்நிலையம் வந்த வி.சி.க. மாவட்ட தலைவர் ஆய்வாளரை சாதி சொல்லி தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்காக அவரைக் கைது செய்தது காவல்துறை. ஜாமினில் வெளியில் வந்த வி.சி.கவினர் காவல்துறையை கேவலப்படுத்தி கோஷம் போட்டு ஊர்வலமாக போனதுடன், காவல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 முட்டாள்தனம்

முட்டாள்தனம்

இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. தேசத்தை காக்கும் எல்லைசாமி நமது இராணுவத்தினர். அதுபோல ஊரை காக்கும் சாமி நமது காவல்துறை என்பார் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள். காவல்துறையை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டி தார்மீக ரீதியாக அவர்கள் மன உறுதியை குலைப்பது நக்சல் தேச விரோத பிரிவினைவாதிகள் செயல். அப்படி காவல்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளானால் சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டமாக போகும். காவல்துறையில் யாராவது தவறு செய்தால் அவர்களை சுட்டிக்காட்டி கண்டிக்கலாம். ஒட்டுமொத்த காவல்துறையை குறைகூறுவது முட்டாள்தனம்.

 பந்தாட்டம்

பந்தாட்டம்

அதே போல் சிவகங்கையில் சட்டவிரோதமாக ஈ.வெ.ரா. சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தாசில்தார், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அரசு மாற்றியிருக்கிறது. இது ஆளும்கட்சி கூட்டணியில் இருப்பவர்கள் செய்யும் சட்ட விரோத செயலுக்கு துணை போக அரசுத் துறையை நிர்ப்பந்திப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் உயர் அதிகாரிகள் துறை மாற்றம் என்ற பெயரில் அரசால் பந்தாடப்படுகிறார்கள். இவற்றை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

 ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் காவல்துறையின் கண்ணியத்தை காக்க முன்வரவும், காவல்துறையை களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இந்து முன்னணியினர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

English summary
Action should be taken against those who insult the police, says kadeswara subramaniam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X