அரசியலுக்கு போன விஜய்.. அஜித் ’சாருக்கு’ வாழ்த்து சொன்ன உதயநிதி! இணைந்து செயல்பட ‘திடீர்’ அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பா ஜிடி4 ரக கார் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிணைந்து செயல்படுவோமென கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் மாநாட்டு திடலில் குவிந்தனர்.

udhayanidhi stalin vijay ajith kumar

தொடர்ந்து ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்திற்கு இடையே நடிகர் விஜய் மாநாட்டு மேடையில் தோன்றினார். முதலில் சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார் தவெக தலைவர் விஜய்.

தொடர்ந்து மேடையின் இருபுறமும் இருந்த நிர்வாகிகளை சந்தித்து பூங்கொத்தை பெற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து மாநாட்டு மேடையில் இருந்து இறுதி வரை அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நடைபாதையில் சென்று தொண்டர்களை சந்தித்தார். தொடர்ந்து பேசிய அவர்" பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.

udhayanidhi stalin vijay ajith kumar

இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. இதற்கிடையே விஜயின் பேச்சுக்கு திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அமைச்சர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை பலரும் விமர்சன கணைகளை தொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை" என கூறினார்.

இந்நிலையில் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிணைந்து செயல்படுவோமென கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

udhayanidhi stalin vijay ajith kumar

நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழக விளையாட்டுதுறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்." என கூறியுள்ளார்.

அஜித்குமார்: தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் கலந்துகொள்ளவுள்ளார். அவரது கார் ரேஸ் அணி துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் ஈடுபடவுள்ளது. நடிகர் அஜித் 24H துபாய் 2025 இல் பந்தைய அணியின் உரிமையாளராகவும், டிரைவராகவும் பங்கேற்பார் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 24H துபாய் 2025 மற்றும் போர்ஷே 992 GT3 கோப்பை கிளாசில் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பார்கள் என கூறப்பட்ட நிலையில், அந்த பந்தயத்திற்கு அஜித் தயாராகும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+