சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் மய்யத்தை மறக்கத்தான்.. இன்னும் 5 வருஷம் பிசி! அரசியலை கொஞ்சம் கவனிங்க ஆண்டவரே! ஏங்கும் மநீம!

Google Oneindia Tamil News

சென்னை : விக்ரம் படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு சினிமா பக்கம் தனது கவனத்தை மீண்டும் செலுத்தியுள்ள கமலஹாசன் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க தயாராகி வரும் நிலையில் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாக மக்கள் நீதி மயயம் நிர்வாகிகள் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும் உலக நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திரையுலகில் 'என்சைக்ளோபீடியா கமலஹாசன்'. இன்று அவரது பிறந்தநாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது திரை பயணம், நடன உதவியாளர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல்வேறு பரிணாமங்களை தாண்டி பயணித்து வருகிறது. 5 தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் ஆண்டவர்.

மனுஸ்மிருதி கொடுத்தால்.. பெரியார் தமிழை கேவலமாக பேசியதாக நோட்டீஸ் கொடுப்போம்.. பாஜக மனுஸ்மிருதி கொடுத்தால்.. பெரியார் தமிழை கேவலமாக பேசியதாக நோட்டீஸ் கொடுப்போம்.. பாஜக

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இன்று அவர் பிறந்த நாள் காணும் நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று அப்டேட் ஒன்று வெளியானது, அதில் ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. கிட்டத்தட்ட 35 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இருவரும் சேரும் படம் என்பதாலும் விக்ரம் படத்தின் பெரு வெற்றி பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

5 வருடம் பிசி

5 வருடம் பிசி

விக்ரம் படம் 500 கோடி வசூலை எட்டிய நிலையில், அடுத்து விக்ரம் 2 படத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கமலஹாசன். சொல்லப்போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு கமலஹாசன் சினிமாவில் மிகவும் பிஸியாகவே இருப்பார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைமை பரிதாபகரமாக இருப்பதாக கூறுகின்றனர் சில நிர்வாகிகள்.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமலஹாசனை கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார். இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ் உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

உற்சாகமிழந்த தொண்டர்கள்

உற்சாகமிழந்த தொண்டர்கள்

இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியலுக்கு களத்திற்கு தேவையான எதையும் கமலஹாசன் மேற்கொள்ளாததால் பல கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்துள்ளனர். கீழ்மட்ட நிர்வாகிகள் கட்சியில் இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என குழம்பிப் போயிருக்கின்றனர். மக்கள் நீதி மையம் கட்சியினருக்கு ஆண்டவர் அருள் புரிவாரா? என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது

English summary
After the big success of Vikram, Kamal Haasan, who has returned his attention to cinema, is preparing to act in several films in succession, and it is reported that the Maklak Neethi Mayyam executives are lamenting that the party's work has slowed down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X