நீ எதிர்த்து போராடியிருக்கணும் சித்ரா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜோடியாக நடித்த குமரன் உருக்கம்
சென்னை: நீ எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும் சித்ரா என சின்னத்திரை நடிகர் குமரன் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் (28) மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜே, அற்புதமான நடிகை, டான்சர் என பன்முகத்தன்மை கொண்ட சித்ரா மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்தான்.

காட்சிகள்
அதில் வரும் கதிர்- முல்லை ஜோடிக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சீரியலில் எதிர்பாராதவிதமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் முல்லைக்கும் கதிருக்கும் இடையே மலரும் காதல் காட்சிகள் மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்தக் காதலை காட்டுவதற்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோவை விஜய் டிவியினர் எப்போதும் வெளியிட்ட வண்ணம் இருப்பார்கள். இந்த சீரியலில் முதன்மை ஹீரோயின் சுஜிதாவை விட இவருக்கே நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

சமூகவலைதளங்கள்
இந்த நிலையில் சித்ராவின் மரணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் சமூகவலைதளங்களில் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த சீரியலில் சித்ராவின் கணவராக நடித்த குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை போட்டுள்ளார்.

புகைப்படம்
சித்ராவின் மரணம் தொடர்பாக அவருடன் கதிராக நடித்த நடிகர் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ராவின் புகைப்படத்தை பகிர்ந்து " உன்னுடைய தைரியத்தால் நீ அறியப்பட்டாய். பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தாய். நீ எதிர்த்து போராடி இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால் இது பதிலல்ல என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications