அமெரிக்காவில் இருந்து வைரமுத்துவுக்கு போன் போட்ட ரஜினி! நல்லபடியாக நடந்தது மருத்துவ பரிசோதனை!
சென்னை: அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்ததாக நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து தம்மிடம் தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது. இதனால் ரஜினிகாந்துக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிகிச்சையைத் தொடர்ந்து அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் உடல்நிலையை நடிகர் ரஜினிகாந்த் பரிசோதித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் ரஜினிகாந்த், அமெரிக்கா செல்ல முடியாமல் இருந்தார்.

அமெரிக்கா பயணம்
இதனால் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனிவிமானத்தில் அமெரிக்கா சென்றார். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

அமெரிக்காவில் ரஜினி
அமெரிக்காவின் மயோ மருத்துவமனையில்தான் ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த மருத்துவமனையின் வெளியே ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா நடந்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

வைரமுத்துவுக்கு போன் போட்ட ரஜினி
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து தம்மை அழைத்து பேசியதாகவும் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்ததாகவும் குறிப்பிட்டுளார். இதனை ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சிக்காக பகிர்ந்து கொள்கிறேன் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு
கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு: அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார்.! மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன் என கூறியுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications