"மே மாதம்.. மே மேன்னு கதறினாலும்".. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சீண்டிய எஸ் வி சேகர்
சென்னை: வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை சாடியுள்ளார்.. இந்த விவாகரத்தில் அண்ணாமலையை நடிகர் எஸ்வி சேகர் பங்கமாய் கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அண்ணாமலை கூறுகையில், சென்னையிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் சொல்ல முடியாத இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். ஆனால் வெள்ள நிவாரண பணிகளை திராவிட முன்னேற்ற கழக அரசு சரியாக மேற்கொள்ளாமல் மெத்தன போக்குடன் செயல்படுகிறது.

தென் மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்த சமயத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போய் இருந்தார். ஆனால் மத்திய குழுவினர் துரிதமாக செயல்பட்டு, தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மத்தியக்குழு ஆய்வு செய்துவிட்டு சென்ற பின்னரே, மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்று வந்தார்.
தமிழக மக்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அக்கறையேயே கிடையாது அவ்வாறு இருந்திருந்தால் வெள்ள நிவாரண பணிகளில் கவனத்தை செலுத்தி இருப்பார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினோ மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். வெள்ள நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ளாமல், மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதிலேயே திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. மழை பாதிப்பு நிவாரண பணியை தமிழக அரசு முறையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தினாலேயே மத்திய அரசு அந்த பணிகளை பொறுப்பெடுத்து செய்கிறது.
இதே அரசியலைத்தானே இங்க இந்த அசட்டு Ex IPS பண்றீங்க. தினசரி மாநில அரசை குறை சொல்றதை தவிர மக்கள் நலனுக்கு சொந்த காசு 10 பைசா செலவு பண்ணியிருக்கீங்களா. இந்த கத்துக்குட்டி அரசியலால 10 ஓட்டு கூட வாங்க முடியாது. Wait till MAY. மே மேன்னு கதறினாலும் ஒரு பிரயோஜமிருக்காது. pic.twitter.com/0TsQMwVkMb
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) December 25, 2023
சென்னை வெள்ளப்பாதிப்பு நிவாரண நிதியாக மத்திய அரசு முதல் தவணையாக ரூ.450 கோடியும், 2-வது தவணையாக ரூ.550 கோடியும் என மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக அரசுக்கு அளித்திருக்கிறது. தென் மாவட்ட வெள்ளத்தை ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை கொடுத்த பின்னர்தான், அதற்கும் மத்திய அரசு நிச்சயம் நிதி ஒதுக்கும். அதற்குள்ளாகவே மழை வெள்ள பாதிப்புக்கு நாங்கள் கேட்ட நிதியை விட குறைவாகவே தந்துள்ளதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, மத்திய அரசிடம் தெரிவித்து உரிய நிதியை நிச்சயம் பெற்றுத்தருவார்" என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை பேட்டி குறித்து செய்தியை ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் எஸ்வி சேகர், அதில் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார்.. வெள்ள நிவாரண பணிகளை சரியாக மேற்கொள்ளாமல், மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துவதிலேயே திமுக அரசு கவனம் செலுத்தி வருவதாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் , பதிவிட்டிருந்த எஸ்வி சேகர், " இதே அரசியலைத்தானே இங்க இந்த அசட்டு Ex IPS பண்றீங்க. தினசரி மாநில அரசை குறை சொல்றதை தவிர மக்கள் நலனுக்கு சொந்த காசு 10 பைசா செலவு பண்ணியிருக்கீங்களா. இந்த கத்துக்குட்டி அரசியலால 10 ஓட்டு கூட வாங்க முடியாது. மே மாதம் வரை காத்திருங்கள். மே மேன்னு கதறினாலும் ஒரு பிரயோஜமிருக்காது." என்று கூறியுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை











Click it and Unblock the Notifications