கோட் ரிலீஸ்.. "மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாடுங்கள்.." ரசிகர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வரும் செப். 5ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், திரைப்படத்தை மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் கூடுதல் பொறுப்புடன் இருக்க ரசிகர்களுக்கு வாய்மொழியாக விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் செப். 5ம் தேதி ரிஸீல் ஆக உள்ளது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

goat vijay

தி கோட்: இப்போது தி கோட் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். விஜய் அரசியலுக்குச் செல்வதற்கு முன்பு வெளியாகும் கடைசி இரு படங்களில் ஒன்று என்பதாலும், இதில் டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி சின்ன வயது விஜய்யை கொண்டு வந்துள்ளதாலும் இந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு விஜய் வாய்மொழியாக சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோட் திரைப்படத்தை மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும் தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்குமாறு அட்வைஸ் செய்துள்ளார்.

தனது திரைப்படம் ரிலீஸாகும் போது விஜய் இது போல ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவது இதுவே முதல்முறையாகும். கடந்த முறை லியோ படத்தின் ரிலீஸின் போது ரோஹினி தியேட்டரில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+