சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கள் செய்வதை விஜய் விரும்பவில்லை.. இனி இப்படி செய்தால் நடவடிக்கை.. விஜய் மக்கள் இயக்கம் வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் தலைவர்களின் உருவ தோற்றத்தில் நடிகர் விஜய்யை சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதை நடிகர் விஜய் விரும்பவில்லை. இந்த போக்கு தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 15 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த 2 தினங்களுக்கு முன்பு முடிந்தது.

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடவும் தனது இயக்கத்தின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்த நடிகர் விஜய் அனுமதி கொடுத்துவிட்டார்.

'2021இல் உள்ளாட்சி.. 2026இல் நல்லாட்சி..' விஜய் அரசியல் என்டரி எப்போது? அதகளப்படுத்தும் மதுரை ஃபேன்ஸ்'2021இல் உள்ளாட்சி.. 2026இல் நல்லாட்சி..' விஜய் அரசியல் என்டரி எப்போது? அதகளப்படுத்தும் மதுரை ஃபேன்ஸ்

அரசியலுக்கு வருமாறு அழைப்பு

அரசியலுக்கு வருமாறு அழைப்பு

இத்தனை நாட்களாக விஜய்யை அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் அழைத்து வந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.

உற்சாக மிகுதி

உற்சாக மிகுதி

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் அவரை அறிஞர் அண்ணாவாகவும் எம்ஜிஆராகவும் சித்தரித்து ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்களை அடித்து ஒட்டுகிறார்கள். மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்யை எம்ஜிஆராகவும் அவர் மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

மதுரையில் விஜய்

மதுரையில் விஜய் "அண்ணா"

அண்மையில் மதுரையில் "நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார் . எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா வேண்டும் அண்ணா" என அண்ணா கெட்டப்பில் விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் என்ன

அறிக்கையில் என்ன

அந்த அறிக்கையில் சமீபகாலமாக இயக்க தோழர்கள் ஒரு சிலர் ஆர்வ மிகுதியால் / ஆர்வகோளாரால் நமது தளபதி அவர்களை, பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை நமது தளபதி அவர்களுடைய படங்களோடு இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ரசிகர்கள் / இயக்க தோழர்களின் இச்செயல்களை அவ்வப்போது தளபதி அவர்களின் அனுமதியின் பேரில் கண்டித்துள்ளேன்.

வருத்தம்

வருத்தம்

இயக்க தோழர்கள் இது போன்ற செயலில் யாரும் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும் இப்படி தொடர்வது வருத்தத்திற்குரியது. இது போன்ற செயல்களை நமது தளபதி அவர்கள் என்றும் விரும்புவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், தளபதி அவர்களின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தளபதி அவர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Vijay Makkal Iyakkam condemns its fans not to compare Actor Vijay with political leaders in poster and the same is not liked by the actor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X