"அண்ணன் இருக்கேன்" வேறு என்ன வேண்டும்! பாலியல் பலாத்காரத்தால் பாதித்த ரசிகைக்கு நடிகர் விஜய் உதவி!
சென்னை: பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட தனது ரசிகையான சிறுமிக்கு நடிகர் விஜய் தனது மன்றத்தின் மூலம் உதவிகளை செய்துள்ளார். மேலும் வேறு எந்த உதவி வேண்டுமானாலும் கேட்குமாறும் தெரிவித்துள்ளாராம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது நிலையை எண்ணி உடலில் தீவைத்துக் கொண்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சிறுமி விஜய்யின் ரசிகை. இவர் விஜய்யிடம் உதவி கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

விஜய் அண்ணா
அந்த வீடியோவில் விஜய் அண்ணா நான் உங்க தீவிர ரசிகை. எனக்கு அப்பா, அம்மா இல்லை. நான் ஒரு ஏழை சிறுமி. பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி. எனக்கு நடந்த கொடுமைக்கு நான் வாழக் கூடாது என்பதற்காக தீ வைத்து சாக போனேன். ஆனால் என்னை சில நல்லவர்கள் காப்பாற்றிவிட்டார்கள்.

உதவி செய்யுங்கள் அண்ணா
நீங்கள் எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் அண்ணா என கூறியிருந்தார். இந்த வீடியோ பெரும்பாலான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வந்த நிலையில் அந்த சிறுமிக்கு விஜய்யிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யை கண்டித்து போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வீரலட்சுமி வீடியோ
அந்த வீடியோவில் வீரலட்சுமி பேசுகையில் "விஜய் அவர்களே உங்களிடம் உள்ள விலையுயர்ந்த கார், நகைகள், சொத்துகள் எல்லாம் உங்கள் பரம்பரை சொத்தா. சாதாரண கூலி வேலை செய்வோர், தமிழக இளைஞர்கள் எல்லாம் டிக்கெட் வாங்கி படம் பார்த்து அப்படி நீங்கள் சேர்த்ததுதான் அந்த சொத்துக்கள். உங்க வசனங்கள் எல்லாம் சினிமாவுக்கு மட்டும் தானா.

17 வயசு சிறுமி
ஒரு 17 வயசு சிறுமி 60 சதவீதம் உடல் எரிந்த நிலையில் உங்களிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த சிறுமிக்கு நீங்கள் உதவ முன்வரவில்லையே. ஒரு தீக்குச்சியை எடுத்து அதை கொளுத்தி உங்கள் கையில் சூடு வைத்து பாருங்கள், அப்போதுதான் தீக்காயத்தின் வலி என்னவென புரியும். சிறிய தீக்காயத்திற்கே நீங்கள் தாங்குகிறீர்களா என பாருங்கள்.

தை 1 வரை விஜய்க்கு கெடு
உங்களுக்கு தை மாதம் 1 ஆம் தேதி வரை தமிழர் முன்னேற்றப் படை அவகாசம் தருகிறது. அதற்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு இல்லை என்றால் சென்னையில் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களின் வாசலில் உங்கள் உருவபொம்மையை தமிழக முன்னேற்றப் படை எரிக்கும். சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்பும் உங்களது உருவபொம்மை எரிக்கப்படும் என கூறியிருந்தார்.

விஜய் கூறியதால் நிர்வாகிகள் உதவி
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை சந்தித்து ரூ 50 ஆயிரம் நிதியுதவியை வழங்கியுள்ளனர். அத்துடன் வேறு எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறும் தெரிவித்தனர். மேலும் விஜய் அறிவுறுத்தியதால்தான் தாங்கள் இங்கு வந்ததாகவும் நிர்வாகிகள் கூறினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications