600/600 மதிப்பெண்.. மாணவி நந்தினியை சந்திக்கும் விஜய்.. ஆனால் அந்த லிஸ்ட் எப்படி கிடைக்கும்?
சென்னை: 600/600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினியை நடிகர் விஜய் சந்திக்க உள்ளாராம். அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு விஜய் பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கும் போது மாணவி நந்தினியை விஜய் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் 234 தொகுதியில் மாணவர்கள் பட்டியல் எப்படி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேரிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17ஆம் தேதி நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளார் விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது பெற்றி விஜய் மக்கள் வெளியிட்ட அறிவிப்பில், மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 12ம் வகுப்புதேர்வில்அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவித்து பரிசு தொகையை வழங்க உள்ளாராம்.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான உடனேயே , மாணவி நந்தினியை தொலைப்பேசி மூலம் நடிகர் விஜய் வாழ்த்தி இருந்தார். இந்நிலையில் தான் நேரில் சந்திக்க போவது உறுதியாகி உள்ளது.
234 தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவது என்பது கல்வித்துறையின் உதவி இருந்தால் தான் சாத்தியம் ஆகும். ஏனெனில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர் மாணவிகளின் லிஸ்ட் அரசிடம் தான் இருக்கும், அந்தந்தமாவட்ட கல்வி அலுவகத்திடம் மட்டுமே இந்த லிஸ்ட்டை பெற முடியும். அரசே இந்த லிஸ்ட்டை இதுவரை வெளியிடவில்லை. மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள் பட்டியலை கூட அரசு வெளியிட வில்லை. 600க்கு 600 மதிப்பெண் பெற்றார் என்பதால் தான் நந்தினியை அடையாளம் கண்டு அனைவரும் வாழ்த்தினார்கள். எனவே தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களின் பட்டியல் எப்படிகிடைக்க போகிறது என்பது தெரியவில்லை.

முன்னதாக கடந்த மாதம் வெளியான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த அரசு உதவிப் பெறும் பள்ளியில் படித்த நந்தினியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார். கவிஞர் வைரமுத்து நந்தினியின் இல்லத்துக்குச் சென்று தங்கப் பேனாவை பரிசளித்து பாராட்டினார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் நந்தினயை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications