ஆயிரம் ரெய்டு வரட்டும்.. நண்பா நீங்க மட்டும் போதும்.. வேனிலும், பஸ்சிலும்.. அதிரடி காட்டிய விஜய்!
Recommended Video
சென்னை: ஆயிரம் ரெய்டுகள் வந்தால் ரசிகர்கள் மட்டும் போதும் என வேன், பஸ் மீது ஏறி செல்பி எடுத்து நடிகர் விஜய் அதிரடி காட்டியுள்ளார். திருவிழா போல் நெய்வேலி என்எல்சியை சுற்றி ரசிகர், ரசிகைகள் கூட்டம் அலைமோதுகிறது.
சினிமாவில் ஆக்ரோஷமாக வசனங்களை பேசும் விஜய் உண்மையில் சைலன்ட்டானவர். எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்.
அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் பெண் ரசிகர்களும் அடங்குவர். தான் நடிக்கும் படத்தில் வேலை செய்யும் சிறிய ஊழியர்கள் வரை அனைவர் மீதும் அக்கறை எடுத்துக் கொள்வார்.

அதீத அக்கறை
அதிலும் சண்டை காட்சிகளின் போது அதில் வரும் ஸ்டன்ட் கலைஞர்கள் படப்பிடிப்பின் போது காயம் ஏதும் ஏற்படாததை உறுதி செய்து கொள்வார். ஒவ்வொரு முறை ஸ்டன்ட் கலைஞர்களை அடிக்கும் போதும் "என்ன நீங்க ஓகேதானே!, ஒன்றும் பிரச்சினையில்லையே!" என விஜய் அதீத அக்கறையுடன் கேட்பாராம் (விஜய் மட்டுமில்லை பெரும்பாலான நடிகர்கள் இப்படித்தான்).

கமல்ஹாசன்
இப்படிப்பட்ட விஜயை கொண்டாடும் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அழைக்கின்றனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வந்ததில்லை. அதே சமயம் சமூக பிரச்சினைகளை பேசும் போது அரசியல்வாதிகளை மறைமுகமாக இசை வெளியீட்டு விழாக்களில் விமர்சிப்பதையும் அவர் தவறுவதில்லை. ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார்.

வெறுங்கை
அஜித்துக்கும் அரசியலுக்கும் 7ஆம் பொருத்தம். எனவே தற்போது நடக்கும் சம்பவங்களையும் அவரது படத்தில் சொல்லப்படும் சமூக கருத்துகளையும் வைத்து பார்க்கும் போது அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிகில் வசூல் தொடர்பாக விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், அன்புச்செழியன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் விஜய் வீட்டில் எதுவும் கிடைக்காமல் அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பினர்.

வரி ஏய்ப்பு
இதையடுத்து விஜய்யை மிஸ்டர் கிளீன் என அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இந்த ரெய்டே அவரது அரசியல் வருகையை ஒடுக்குவதற்காக என ரசிகர்களும் மற்ற அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டினர். ரஜினிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித் துறையினர் வழக்கு தொடரப்பட்டு அது வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே அவர் குடியுரிமை திருத்தத்திற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். இதனால்தான் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது என்ற உறுதிப்படுத்தப்படாத பேச்சுகள் வெளியே வருகின்றன.

என்எல்சி
அது போல் விஜய்யையும் மிரட்டி பார்க்கவே இந்த ரெய்டு என சொல்லப்படுகிறது. விரைவில் அவரும் ரஜினி போல் பாஜக ஆதரவு அறிக்கை விடுவார் என தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் விஜய் மாஸ் காட்டி வருகிறார். என்எல்சியில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பிற்கு வந்த ரசிகர்களுடன் வேன் மீது ஏறி செல்பி எடுத்துக் கொண்டு அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அசராதவர்
அது போல் இன்றும் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் வந்தனர். நேற்று வேன் மீது ஏறி செல்பி எடுத்த விஜய், இன்று பஸ் மீது ஏறி நின்று செல்பி எடுத்தார். இதனால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஆயிரம் ரெய்டுகள் வந்தால் நண்பா நீங்கள் மட்டும் போதும் என விஜய் எந்த ரெய்டுக்கும் அசராதவர் என்பது தெரிகிறது. "மாஸ்டர் என்றைக்குமே மாஸ்டர்தான்!"
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications