சீமான் ஓவரா பேசுறாரே! பதிலடி கொடுக்கணும்! விஜய்யிடம் சொன்ன தவெகவினர்! சிரித்தபடியே தளபதி சொன்ன பதில்
சென்னை: தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து வருவதற்கு என்ன பதிலடி கொடுப்பது என கேட்ட தவெக நிர்வாகிகளிடம் விஜய் கூறியது என்ன என்பதை பார்க்கலாம். விஜய் சொன்னதைத்தான் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் பின்பற்றினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடந்தது. அப்போது இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, ஆளுநர் பதவியை அகற்றுவது, நீட் தேர்வை ரத்து செய்வது, பரந்தூர் விமான நிலையத்தை எதிர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது போல் விஜய் மாநில நிர்வாகிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் அவர்களுடன் 5 நிமிடங்கள் தனித்தனியாக வரவழைத்து பேசினார். அப்போது விஜய், இந்த மாநாடு வெற்றி அடைந்ததற்கு காரணமே நிர்வாகிகளும் தொண்டர்களும்தான். நீங்கள் இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை என கூறி நெகிழ்ந்தாராம். மேலும் தவெக மாநாட்டில் ஏதாவது குறைகள் இருந்தால் அதையும் சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொண்டாராம். ஒவ்வொரு நிர்வாகியும் தங்களுக்கு தெரிந்த குறைகளை கூறினராம்.
மேலும் விஜய்யிடம் 5 நிமிடங்கள் தனியே பேசிய நிர்வாகிகள் தனித்து போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டனராம். அதற்கு விஜய் புன்னகையித்தபடியே இருந்தாராம். ஆம் என்றும் சொல்லவில்லையாம், இல்லை என்றும் மறுக்கவில்லையாம். அதுபோல் விஜய்யுடன் தனியாக பேசிய அனைத்து நிர்வாகிகளும் வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள் (விஜய்) எங்கள் தொகுதியில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனராம்.
அதற்கும் புன்னகைத்த விஜய், போட்டியிடுவது குறித்து பிறகு பேசுவோம் என்றாராம். அது போல் தவெக கொள்கை குறித்தும் தீர்மானங்கள் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்கிறாரே. அதற்கு என்ன மாதிரியான பதிலடியை கொடுப்பது என கேட்க நினைத்த நிர்வாகிகள் சீமான் என பெயரை சொன்னதுமே விஜய் புரிந்து கொண்டு, சிரித்தபடி அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாமல் கடந்து சென்று கட்சிப் பணியாற்றுங்கள் என கூறி டாப்பிக்கை சேஞ்ச் செய்துவிட்டாராம்.
தவெக செயற்குழு கூட்டம் முடிவடைந்ததும் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்த போது தவெக தீர்மானங்கள் குறித்து கூறிய அவரிடம் சீமான் குறித்து கேட்டதுமே அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார். எனவே விஜய் சொன்னதற்கேற்றார் போல் புஸ்ஸி ஆனந்த் நடந்து கொண்டார். இந்த செயற்குழு கூட்டத்தில் சீமானுக்கு விஜய் காட்டமாக பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புஸ்வானமாகிவிட்டது.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு சீமான் பேசிய பேச்சுக்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அவர் பேசுகையில் "கொள்கை என வந்துவிட்டால் அண்ணன், தம்பி கிடையாது. எனக்கு குட்டி ஸ்டோரி எல்லாம் சொல்லத் தெரியாது. கருவாட்டுக் குழம்பையும் சாம்பாரையும் கருவாட்டு சாம்பார் என சொல்ல முடியுமா? அது போல்தான் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் எப்படி இரு கண்கள் என சொல்ல முடியும்.
திராவிடம் என்பது கள்ளச்சாராயம் குடிப்போருக்கு நஷ்ட ஈடு கொடுப்பது, தமிழ் தேசியம் என்பது மதுக்கடைகளை மூடச் சொல்வது, எப்படி இரண்டும் ஒன்றாகும். அது போல் திமுகவை மட்டும் விமர்சித்துவிட்டு அதிமுகவை புனிதராகிவிடுவது எந்த வகையில் நியாயம். அந்த கட்சியின் தலைவி ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றாரே, அது நினைவில்லையா?
நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். அப்படியிருக்கையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதது ஏன் என்றும் கேட்ட சீமான், ஒரு கட்டத்தில் அண்ணும் கிடையாது தம்பியும் கிடையாது என கூறி ப்ரோ இட்ஸ் ராங் ப்ரோ என சீமான் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications