"முதல்வரை நேரிலேயே பார்த்து சொல்லிட்டேன்".. 65 நாட்கள் திமுக ஆட்சி.. விஜய்சேதுபதி வைரல் பேச்சு!
சென்னை: திமுக அரசின் கடந்த 65 நாள் ஆட்சி குறித்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதி பொதுவாக சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள், அவலங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது வழக்கம். நடிப்பது என்பது மட்டுமின்றி நடிகர் சூர்யா, விஜய் போல பொது மக்கள் பிரச்சனைகளில் பல முறை விஜய் சேதுபதி துணிச்சலாக பேசி இருக்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிராகவும் பல மேடைகளில் கோபமாக பேசி இருக்கிறார். அரசியல் மாற்றம் வேண்டும் என்பதை பல மேடைகளில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

பேட்டி
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேட்டி அளித்துள்ளார். அதில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக பண்ணிக்கிட்டு இருக்கிறார். ரொம்ப நன்றாக பணியாற்றுகிறார். அவரை நேரில் சந்தித்தேன்.

நேரில் பார்த்தேன்
அவரை நேரில் சென்று பார்த்தே சொல்லிவிட்டேன். ரொம்ப சிறப்பா இருக்கு சார் என்று நேரிலேயே சொல்லிவிட்டேன். நான் மட்டுமில்லை என்னுடன் இருப்பவர்களிடமும் கேட்டேன். என் நண்பர்களிடம் கேட்டேன்.

கருத்து
என்னை சுற்றி உள்ளவர்கள், என்னுடன் வேலை பார்ப்பவர்கள். என்னுடைய டிரைவர் ஆகியோரிடம் கேட்டேன். எப்படி பார்க்குறீங்க, ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். எல்லோரும் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். யாரும் குறை சொல்லவில்லை.

குறைவாக பேசவில்லை
ஆட்சி குறித்து யாரும் எங்களிடம் குறையாக பேசவில்லை என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டு இருக்கிறார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொது நல பிரச்சனைகள் குறித்து பொதுவாக பேசும் விஜய் சேதுபதி, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பேசியது இல்லை. முதல்முறை இப்படி வெளிப்படையாக ஆளும்கட்சியை விஜய் சேதுபதி பாராட்டி இருக்கிறார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications