நடிகை சித்ராவின் இன்ஸ்டாவில் முக்கிய போட்டோஸ் திடீரென அழிப்பு! ஏன் என்னாச்சு? மரணத்திற்கு க்ளூ?
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை ஏன் அழிக்கப்பட்டன, இந்த போட்டோக்களுக்கும் சித்ரா மரணத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை சித்ரா தனது கடின உழைப்பால் மக்கள் மனதில் இடம் பெறும் அளவுக்கு முன்னுக்கு வந்தவர். அவர் விஜே, சீரியல் நடிகை என ஜொலித்துவிட்டு சினிமாவில் கால் பதித்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜே சித்ரா மரணமடைந்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள நிலையில் அவரது மரண வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. சித்ராவின் மரணத்தில் தொடர்புடையவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என அவரது கணவர் ஹேமந்த் பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு கொடுத்துள்ளார்.

சித்ரா மரணம்
மேலும் சித்ராவின் மரணத்திற்கு மாஜி எம்எல்ஏ, மாஜி அமைச்சர், போதை மாஃபியா, சின்னத்திரை நடிகர் என 4 பேருக்கு தொடர்பிருக்கிறது என ஹேமந்த் குற்றம்சாட்டியுள்ளார். பெரம்பலூரில் துணிக் கடை ஒன்றை திறக்க சென்ற போதுதான் சித்ராவுக்கு மாஜி எம்எல்ஏவால் பிரச்சினை ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை
அவர்கள் யார் யார் என நான் போலீஸ் விசாரணையில் கூறுவேன். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என ஹேமந்த் தெரிவித்திருந்தார். இதனால் அந்த மாஜி அமைச்சர் யாரு, மாஜி எம்எல்ஏ யாரு என்பது குறித்து யூகங்கள் அடிப்படையில் நெட்டிசன்களாகவே ஒரு சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கம்
இந்த நிலையில் சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் டெலிட் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்திற்கும் சித்ரா மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருந்திருக்கலாம். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புகைப்படங்கள் அழிப்பு
சைபர் கிரைம் போலீஸாரால் அந்த டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்களை மீண்டும் மீட்டெடுத்தால் அது இந்த வழக்கு விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று தெரிகிறது. போட்டோக்களை அழிக்கும் அளவுக்கு அப்படி என்னென்ன முக்கிய படங்களில் சித்ராவின் இன்ஸ்டாகிராமில் இருந்தன என்பது தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications