டிவி சீரியல் நடிகை திவ்யா வழக்கு..குடும்ப வழக்குதான்..வாதாடி ஜாமின் வாங்கிய நடிகர் அர்ணவ்
சென்னை: கர்ப்பிணி மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அர்ணவ், பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் திவ்யா தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். அதே சீரியலில் அர்ணவ் உடன் இணைந்து நடித்தார் திவ்யா. இருவரும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர்.
சன் டிவியில் மகராசி சீரியலில் நடித்தார் திவ்யா. பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார் திவ்யா. விஜய் டிவி செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார் அர்ணவ்.

திவ்யா அர்ணவ் திருமணம்
திவ்யாவும் அர்ணவும் திருமணம் செய்துக் கொண்டதாக கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் போட்டோக்களுடன் செய்திகள் வெளியாகின. இந்து முறைப்படியும் இஸ்லாமிய முறைப்படியும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை அறிவித்த சில வாரங்கள் கழித்து நிலையில், தனது கணவர் அர்ணவ் தன்னை தவிர்த்து வருவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா.

அடித்த அர்ணவ்
கர்ப்பமாக இருக்கும் தன்னை கீழே தள்ளியதால், கரு கலைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் நடிகை திவ்யா கண்ணீருடன் புகார் தெரிவித்திருந்தார். வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை தவிர்த்து வருவதாகவும் கூறினார் திவ்யா.

கட்டாய மதமாற்றம்
கட்டயமாக மதமாற்றம் செய்து தன்னை திருமணம் செய்து கொண்ட அர்ணவ், தான் கர்ப்பமான பின்னர் தன்னை தவிர்த்து வருவதாகவும் தன்னை கவனிப்பதில்லை, உணவு வாங்கிக் கொடுப்பதில்லை என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் திவ்யா.

அர்ணவ் மீது வழக்கு
நடிகை திவ்யா அளித்தப் புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் அர்ணவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் அர்ணவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அர்னவின் வக்கீல்கள், அர்னவிற்கு ஜாமீன் வேண்டுமென பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

திவ்யா தரப்பு மனு
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, திவ்யா தரப்பும் அர்னவ் தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அர்ணவ் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளதால் அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்றும் திவ்யா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அர்ணவின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அர்ணவுக்கு நிபந்தனை ஜாமின்
இதனைத் தொடர்ந்து மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு அர்ணவ் தரப்பில் அவரது வக்கீல்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அர்ணவ் தரப்பில், இது குடும்ப வழக்கு அதனால் குடும்ப வழக்காக மட்டுமே பார்க்க வேண்டும். குற்ற வழக்காக பார்க்கக்கூடாது என்ற வாதங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு நீதிபதி, அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Click it and Unblock the Notifications