Dude movie: சென்னையில் டியூட் பட நடிகைக்கு பாலியல் தொல்லை.. கார் டிரைவர் மீது பரபரப்பு புகார்.. போலீஸ் விசாரணை
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி உள்ள டியூட் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள துணை நடிகை ஒருவரிடம் கால் டாக்சி டிரைவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி உள்ளது டியூட். இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நேற்று இந்த படம் வெளியானது. வெளியான முதல் நாளே இந்த திரைப்படம் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

டியூட் பட இசைவெளியீட்டு விழா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்த படம் வெளியாகி இருப்பதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே தீபாவளி ரேஸில் துருவ் விக்ரமின் பைசன், ஹரீஸ் கல்யாணின் டீசல் படமும் வெளிவந்துள்ளது. இதில் டியூட் படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, டிராகன் படம் பெரிய ஹிட் அடித்த நிலையில் இந்த படமும் ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது.
துணை நடிகையிடம் பாலியல் சீண்டல்
இந்த படத்தில் நடிகையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் இந்த படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே டியூட் படத்தில் நடித்துள்ள துணை நடிகைக்கு கால் டாக்சி டிரைவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதாவது டியூட் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இதற்கு படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்கள், சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டர். இந்த இசைவெளியீட்டு விழாவில், துணை நடிகை ஒருவரும் கலந்துகொண்டார்.
கால் டாக்சி டிரைவர் மீது வழக்கு பதிவு
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால், அவர் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக ரயில் மூலமாக சென்னை செண்டிரல் வந்தடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கால் டாக்சி பிடித்து இசை வெளியீட்டு விழா நடக்கும் இடத்திற்கு வருகை தந்துள்ளார். அப்போது அந்த கால் டாக்சியை ஓட்டிய டிரைவர் துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அந்த துணை நடிகை இது பற்றி பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். இதில் துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கால் டாக்சி டிரைவர் கணேச பாண்டியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கோமாளி, லவ் டுடே, டிராகன்
இயக்குனராக கோலிவுட் திரையரங்கில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் படமே வெற்றியில் முடிந்தது. ரவி மோகன் ஹீரோவாக நடித்த கோமாளி படம் ஹிட் அடித்ததால், அடுத்ததாக தானே இயக்கி, ஹீரோவோகவும் லவ் டுடே படத்தில் நடித்தார். இந்த படமும் 100 கோடி வசூல் செய்து பெரிய ஹிட் ஆனது.
தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன் படமும் ஹிட் ஆனது. இந்த படமும் ரூ.150 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. தற்போது நடித்துள்ள டியூட் படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்த்து உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications