படுக்கையறையை எட்டிப்பார்ப்பது அரசியலா? அண்ணாமலை குறித்து சர்ச்சை வீடியோவுடன் காயத்ரி ரகுராம் பதிவு
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடியில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, 1930ல் பாஜக அப்படி இருந்தது. இப்படி இருந்தது என கூறி வருகின்றனர். பாஜக அனைவருக்கும் சொந்தமான கட்சி. அதனை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. இந்த கட்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒருவர், 2 பேரால் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பாஜக கட்சி இல்லை. இது ஒரு காட்டாற்று வெள்ளம் என்று கூறினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பெல்லாம் முடிந்த பின்னர் மைக் எல்லாம் செய்தியாளர்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த பாஜக நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில்அப்போது ஒரே பெண்ணை இருவர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் மனுஷனாக இருக்கவே தகுதியில்லை என்பது போல் அண்ணாமலை பேசியதாக ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம். Passing judgmental words. இதில் பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார்.… pic.twitter.com/PTVfk9qeUX
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) June 2, 2023
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம்.. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம். அண்ணாமலை பேசும் போது பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார். சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்தும் இப்படித்தான் கருத்துகளை பேசுகிறார். உண்மை தெரியாமல் அவரை ஜட்ஜ் செய்து கொள்கிறார். அண்ணாமலை முழு அழுக்கு மற்றும் மோசமான குற்றவாளி.
அண்ணாமலை முற்றிலும் மோசமானவர் மற்றும் கண்ணியம் இல்லாதவர் கிசுகிசு பேசுவதற்கு வேறு வேலை இருக்கிறது. மேனேஜர் அவருக்கு சரி, தலைவர் அல்ல. கடந்த டிசம்பரில், நான் இல்லாதபோது, ஒரு கூட்ட அரங்கில் 150 பேர் முன்னிலையில் அவர் என்னிடம் அதையே செய்தார். அண்ணாமலை ஒரு கோழை" இவ்வாறு கடுமையான பதிவினை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார். இதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications