காயுடு லோஹருக்கு இப்படி ஒரு நிலைமையா? ரத்தமும், மண்ணும் கலந்து.. ஷாக் ஆன ரசிகர்கள்! என்னாச்சு?
சென்னை: உடல் முழுவதும் ரத்தத்தோடு மிகவும் பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறார் நடிகை காயுடு லோஹர். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர் ரசிகர்கள். தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு என்ன காரணம் என அந்த வீடியோவிலேயே கூறியுள்ளார் காயுடு லோஹர். பின்னர் தான் அது படத்திற்கான மேக்கப் என்பது தெரியவந்தது.
டிராகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் காயுடு லோஹர் இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். கன்னடத்தில் வெளியான முகில் பேட்ட படத்தின் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.
அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தியம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் தமிழில் இவருக்கு நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து அதர்வா நடிக்கும் இதயம் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் மேலும் சிவகார்த்திகேயன் படத்திலும், சிம்புவின் 49 வது படத்தின் நாயகியாகவும் அவர் தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். உச்சகட்ட கவர்ச்சி காட்டும் அவரை ஒரு சிலர் விமர்சித்தாலும் மில்லியன் கணக்கில் லைக்குகள் அவருக்கு குவிகிறது.
சில நேரங்களில் சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம்தான். அப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும், அதற்காக 35 லட்சம் ரூபாய் அளவிற்கு 'கிஃப்ட்' வழங்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது சிசிடிவி காட்சிகள் என்றும் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் அது குறித்து காயுடு லோஹர் பேசவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் உடல் முழுவதும் காயத்துடன் ரத்தம் வடிய இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன? ஏது? என்று கேள்விக்கணைகளை தொடுத்தனர்.
சிறிது நேரத்திலேயே வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அப்போதுதான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். காரணம் படத்துக்கு மேக் அப் போட்ட வீடியோ. அது '19ஆம் நூற்றாண்டு' படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் படத்துக்காக ரத்தமும் மண்ணும் கலந்து போட்ட மேக்கப் மற்றும் குதிரை சவாரி செய்த வீடியோக்களை தான் அவர் வெளியிட்டு இருக்கிறார். இதை அடுத்தே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications