அந்த குழந்தை கருப்பா, சிவப்பா.. முகம்கூட பார்க்கலையே.. குமுறும் வாடகை தாய்.. இவ்ளோ இருக்கா

வாடகை தாய்களின் பிரசவ கால இன்னல்கள் குறித்து ஒருவர் விவரித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "குழந்தை பிறந்ததும், அது கருப்பா, சிவப்பா என்றுகூட தெரியாது.. கண் முழிக்கும் முன்னாடியே அந்த குழந்தை, என்னை விட்டு போயிடும்.. உரியவர்களிடமும் சேர்ந்துவிடும்" என்று மனம்உருகி சொல்கிறார் ஒரு வாடகை தாய்.

மருத்துவ விஞ்ஞானம் அபரிமிதமாக முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த யுகத்தில், மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும் புதிய நுட்பங்கள் அடுத்தடுத்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பம்தான், "வாடகைத் தாய்".. பிரபல நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் மூலம், வாடகை தாய் குறித்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பேசப்பட்டது.. இப்போது விக்னேஷ் - நயன்தாரா விவகாரத்துக்கு பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது... இதை பற்றிதான் சோஷியல் மீடியா முழுவதும் பேட்டிகளாக, விவாதங்களாக, கருத்துக்களாக, கிளம்பி உள்ளன.

கர்ப்பம்

கர்ப்பம்

இதற்கான சட்டசிக்கல்கள், விதிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன.. இதை பற்றி பலரும் விவாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால், வாடகை தாயாக, அந்த கருவை சுமக்கும் பெண்ணின் ஆழ்மனசு வலியை பெரிதாக யாரும் கண்டுகொள்வதுமில்லை, அதை பற்றி அக்கறைப்படுவதுமில்லை. அப்படிப்பட்ட ஒரு வாடகை தாயைதான், பிரபல சேனல் ஒன்று பேட்டி கண்டுள்ளது.. இன்னொருவர் கருவை தன் வயிற்றில் சுமந்த அந்த அனுபவம், அதனால் ஏற்படும் இன்னல்கள், சமூக தாக்குதல்கள், விளைவுகள் குறித்தெல்லாம் கூறியுள்ளார்.. அதை சுருக்கம்தான் இது:

 கர்ப்பப்பை

கர்ப்பப்பை

சூழ்நிலை காரணமாக 10 வருடங்களுக்கு முன்பு வாடகை தாயாக மாறினேன்.. 2 லட்சம் தரேன்னு சொன்னாங்க.. வாடகை தாய் என்றால் என்ன என்று ஏஜென்ட் கிட்ட கேட்டேன்.. ஆஸ்பத்திரியில் வந்து நேரடியாகவே தெரிந்து கொள் என்று சொல்லிதான் அழைத்து சென்றார்கள்.. இப்படி வாடகை தாயாக இருக்க முடிவெடுத்துவிட்டால், மருத்துவமனைக்கு 4 நாட்களுக்கு முன்பே செல்ல வேண்டும்.. முழு செக்கப் செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட தம்பதியரின் கருமுட்டை என் கர்ப்பப்பையில் பொருந்துமா என்று பார்ப்பார்கள்..

 இடர் 1

இடர் 1

அப்படி பொருந்திவிட்டால், அவர்கள் இருவரின் கருமுட்டை என் கர்ப்பப்பையில் செலுத்துவார்கள்.. இப்படி செலுத்திவிட்டால், 4, 5 மாதம் வரை நம் வீட்டில் இருக்கலாம்.. அதற்கு பிறகு 3 மாதம்வரை மருத்துவமனையில்தான் இருக்க வேண்டும்.. வாடகை தாய்கள் தங்குவதற்காகவே தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.. ஆஸ்பத்திரியிலேயே தங்கிடணும்.. டாக்டர்கள், நர்ஸ்களே எங்களை பார்த்துக்குவாங்க..

 இடர் 2

இடர் 2

இந்த வாடகை தாயாக இருப்பதில் என்ன சிக்கல் என்றால், நம்ம சொந்த குழந்தையைவிட, இன்னொருத்தர் குழந்தையை நாம் இன்னும் ஜாக்கிரதையாக, பூப்போல பார்த்து கொள்ள வேண்டும்.. அதிர்ச்சியான வேலை செய்யக்கூடாது. சுறுசுறுப்பா நடக்ககூடாது.. பட்டாசு சத்தம்கூட கேட்ககூடாது.. 8 மாசமும் பத்திரமாக பார்த்துக்கொண்டு, அந்த குழந்தையை பெத்து தர வேண்டும்.. வாடகை தாய் என்றால் என்ன என்பதை டாக்டர்கள் எனக்கு புரியவைக்கவும், என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, மற்றபடி என் வீட்டில் முதலில் இதை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள்..

 இடர் 3

இடர் 3

எவ்வளவு கஷ்டம் வந்தாலும், வேற வேலை செய்து சம்பாதிக்கலாம், இது தப்பு.. அதெல்லாம் செய்யக்கூடாது.. இன்னொருத்தர் குழந்தையை நாம ஏன் சுமக்கணும்? என்று எங்க வீட்டில் இருப்பவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள் என்னை கேவலமாக நினைத்தார்கள்.. இன்னொருத்தரிடம் போய் குழந்தை பெத்துக்கிட்டியான்னு என்னை பேசுவாங்க.. நான் வாடகை தாய் என்று சொல்ல முயற்சித்தாலும், அவர்கள் கேலி கிண்டல்தான் செய்வாங்க..

 இடர் 4

இடர் 4

இதை பற்றியெல்லாம் அவங்களுக்கு தெரியாது.. இப்படி வாடகை தாயாக இருக்க 2 லட்சம் ரூபாய் பேசப்பட்டது.. ஆனால், எனக்கு ஒன்றரை லட்சம்தான் தந்தாங்க.. மீதி 50 ஆயிரம் தரவேயில்லை.. முன்னாடியெல்லாம் 2 லட்சம் தந்தாங்க.. இப்போ நிறைய பேர் வாடகை தாயாக வந்துவிட்டார்கள்.. ஒரே கர்ப்பப்பையில் 2 கருவை வைக்கிறார்கள்.. ஒருகுழந்தைக்கு 3 லட்சம் என்றால், 2 குழந்தைக்கு 6 லட்சம் வாங்கி கொள்கிறார்கள்.. கருவை தருபவர்கள் என்னை பார்ப்பார்கள்.. ஆனால், நாம்தான், அவர்கள் யார் என்று முகத்தை பார்க்க முடியாது..

 நார்மல் டெலிவரி

நார்மல் டெலிவரி

நாங்கள் யார் குழந்தையை சுமக்கிறோம் என்பதுகூட கடைசிவரை தெரியாது"வறுமையில் இருப்பவர்கள் இப்படி வாடகை தாயாக இருக்க முன்வருகிறார்கள்.. ஆனால், அந்த குழந்தை நார்மலாக பிறக்க வாய்ப்பில்லை.. ஆபரேஷன் செய்துதான் எடுப்பார்கள்.. குழந்தை பிறந்ததும், அது கருப்பா, சிவப்பா என்றுகூட தெரியாது.. கண் முழிக்கும் முன்னாடியே அந்த குழந்தை, என்னை விட்டு போயிடும்.. உரியவர்களிடமும் சேர்ந்துவிடும்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+