1 வருடத்திற்குள் கணவரை பிரிந்த பிரியங்கா நல்கரி.. சீரியலில் ஏற்பட்ட பிரச்சனை! அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: சன் டிவியில் ரோஜா சீரியல் மூலமாக பிரபலமான நடிகை பிரியங்கா நல்கரி கடந்த வருடத்தில் தான் அவருடைய காதலரை திருமணம் செய்திருந்தார். எளிமையாக நடைபெற்ற இவர்களுடைய திருமணம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட நிலையில் இப்போது பிரியங்கா கணவரை பிரிந்து விட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
சமீபத்தில் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தான். அவரிடம் ரசிகர்கள் நீங்கள் இப்போது சிங்களாக இருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்டிருக்கும் நிலையில் அதற்கு ஆமாம் என்று பிரியங்கா பதில் கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் சன் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்து சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா சீரியல். இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தொடர்ச்சியாக இந்த சீரியலில் கதாநாயகியாக பிரியங்கா நல்கரி ரோஜா கேரக்டரில் நடித்து வந்தார். இதனால் இவருடைய பெயர் உண்மையான பெயர் பலருக்கும் தெரியாது ரோஜா என்றுதான் ரசிகர்களுக்கு தெரியும்.
இந்த நிலையில் தான் ரோஜா சீரியல் முடிவடைந்ததும் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் பிரியங்கா நல்கரி தன்னுடைய திருமணத்தை செய்து முடித்து இருந்தார். ஏற்கனவே பிரியங்கா ராகுல் என்பவரை காதலித்து வந்திருந்த நிலையில் இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர்.
பிறகு இருவரும் மீண்டும் காதலிக்க தொடங்கி திருமணத்தை செய்திருந்தனர். இவர்களுடைய திருமணம் எளிமையாக முடிந்திருந்தது. இதனால் இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்ற கேள்விகளும் எழுந்து வந்தது. இந்த நிலையில் அப்படியெல்லாம் இல்லை எங்களுடைய திருமணம் மலேசியாவில் நடைபெற்றது. அதனால் மிகப்பெரிய அளவில் குடும்பத்தினரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று பிரியங்கா விளக்கம் கொடுத்திருந்தார்.
இப்படியான நிலையில் திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே சீதாராமன் சீரியலில் இருந்து பிரியங்கா விலகிவிட்டார். அதற்கு காரணம் கூட அவருடைய கணவர் தான் என்றும் கூறப்பட்டது. காரணம் சீரியலில் நடிப்பதற்காக பிரியங்கா சென்னைக்கு வந்திருப்பதாகவும் அவருடைய கணவர் மலேசியாவில் இருப்பதாகவும் இதனால் இவர்களுக்குள் ஒரு டிஸ்டன்ஸ் இருப்பதால் பிரியங்கா நடிப்பை விட்டு விலகியதாகவும் கூட கூறப்பட்டது.
ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியல் மூலமாக பிரியங்கா மீண்டும் நடிக்க தொடங்கியிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தன்னுடைய கணவர் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். அதோடு கணவனோடு எடுத்த ரிலீஸ் வீடியோக்கள் என்று எல்லாவற்றையும் டெலிட் செய்திருக்கும் நிலையில் பிரியங்காவின் கணவர் ராகுலும் எல்லா புகைப்படங்களையும் டெலீட் செய்திருக்கிறார்.
இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று கேள்விகள் எல்லோருக்கும் இருந்து வந்தது. இப்படியான நிலையில் தான் நேற்று பிரியங்கா நல்கரி தன்னுடைய ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் இப்போது சிங்கிளா என்று கேட்க அதற்கு ஆமாம் என்று பதில் கொடுத்து அதை தன்னுடைய ஸ்டோரியில் பிரியங்கா பகிர்ந்து இருக்கும் நிலையில் அவர் அவருடைய கணவரை உண்மையில் பிரிந்து விட்டார் என்று தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது பற்றி வெளிப்படையாக பிரியங்கா நல்கரி அதில் தெரிவிக்கவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications