ஜோசப் விஜய்னு சொன்னால் வலிக்குதாம்.. ஏன் வலிக்குது? வீடியோ வெளியிட்டு விஜயலட்சுமி பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோசப் விஜய்னு சொன்னால் எவனுக்கோ வலிக்குதாம்.. ஏன் வலிக்குது?.. என நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சும்மா எதை எடுத்தாலும் குற்றம் சொல்ல வேண்டியது.. ஜோசப் விஜய் என்பது தானே அவருடைய உண்மையான பெயர்.. பைத்தியங்களடா நீங்க.. என சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜய் அவர்கள் நல்லா நேர்மையாக ஆட்சி செய்கிறார் என்றும் விஜயலட்சுமி பேசினார்.

நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- "ஜோசப் விஜய்னு சொன்னால் எவனுக்கோ வலிக்குதாம்.. ஏன் வலிக்குது?.. ஜோசப் விஜய் என்பது தானே முதல்வர் விஜய் அவருடைய உண்மையான பெயர்.. உண்மையான பெயரைத் தானே அவர் வைத்து இருக்கிறார்.. எதாவது பொய்யான பெயரை மக்களை ஏமாற்றுவதற்காக வைத்து இருக்கிறாரா? சும்மா எதை எடுத்தாலும் குற்றம் சொல்ல வேண்டியது..

Vijayalakshmi indirectly criticized Seeman regarding the Joseph Vijay name issue

பைத்தியங்களடா நீங்க..

பேசுனால் தப்பு.. பேசாவிட்டால் தப்பு.. மூச்சு விட்டால் தப்பு.. மூச்சு விடலன்னா தப்பு.. பைத்தியங்களடா நீங்க.. யாரு யாரெல்லாம் சும்மா இந்த மாதிரி பேசுறீங்களோ உங்களை எல்லாம் கேக்குறேன்.. நல்லா நேர்மையாத் தான் விஜய் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார். விஜய் நேர்மையாகத் தான் அரசியல் செய்கிறார்..

அதேபோல இன்னொருவர் விஜய்யை விமர்சிக்கிறார். விஜய் சட்டமன்றத்தில் அமைதியாக இருக்கிறாராம். அவரால் 5 நிமிடம் கூட அப்படி இருக்க முடியாதாம். விமர்சனம் பண்ணுறவருக்கு சொல்கிறேன். உன்னால ஐந்து நிமிடம் இருக்க முடியாது என்றால் அது உன் பிரச்சினை. முதல்வர் விஜய் என்ன செய்வார். சட்டமன்றத்தில், கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி என எதாவது ஆடலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அப்படி எல்லாம் செய்ய முடியாது.

குலைக்கும் கேட்டகிரியில் இருக்க போறீங்களா?

எல்லாரும் அமைதியாகத்தான் இருக்கிறோம். அப்படித்தான் முதல்வர் விஜய்யும் இருக்கிறார். நீங்கள் எல்லாம் எவ்வளவு அடி முட்டாளாக இருக்கிறீங்க. உங்களை நம்பி வாக்களித்து தமிழ்நாடு மக்கள் எதாவது கொடுத்து இருந்தால் என்ன ஆகியிருந்து இருக்கும். மக்களுக்கு என்ன நன்றி சொல்லனும் தெரியுமா? புத்திசாலித்தனமாக வாக்களித்து விஜய்யை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள்.

விஜய் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை போட்டதுக்கு கிண்டல் செய்றீங்க. தமிழர்களின் பாரம்பரிய உடையத்தானே அவர் போட்டு இருக்கிறார். முதல்வர் விஜய்யை கிண்டல் செய்பவர்களை மக்கள் என்ன கேட்டகிரியில் வைத்து இருக்கிறார்கள் தெரியுமா? சூரியனை பார்த்து ஏதோ ஒன்னு குலைக்குமே.. அந்த குலைக்குற கேட்டகியில்தான் இருக்க போறீங்களா.. இல்லை கொஞ்சம் மானம் மரியாதை, சூடு சுரனையோட மனிதர்களோட கேட்டகிரிக்கு வரப்போறீங்களா? என்பது உங்கள் கையில்தான் இருக்கு.." என்று பேசினார்.

சீமானை விமர்சித்து வீடியோ?

பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யின் சகோதரியாக நடித்து பெயர் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. தமிழில் பல்வேறு படங்களி நடித்துள்ள விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து இருந்தார். இது தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து சீமான் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

பெங்களூரில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமி, விஜய் முதல்வரான பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த சூழலிதான் தற்போது, முதல்வர் விஜய்யை விமர்சித்தவர்களை விமர்சித்து வீடியோவில் பேசியிருக்கிறார். முதல்வர் விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+