அதானி முதல் ஹுன்டாய் வரை.. தமிழகத்தில் முதலீடு செய்யும் டாப் நிறுவனங்கள்
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், பெரிய நிறுவனங்கள் எந்த அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சார்பில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில், புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
2 நாட்கள் முடிவில், உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதில் சில பிரபல நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
- ரூ.12,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்து
- பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் ரூ.7000 கோடிக்கு ஒப்பந்தம்
- ரூ.3,100 கோடிக்கு எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து
- ரூ.1,250 கோடிக்கு பிஎஸ்ஏ நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து.
- யமஹா நிறுவனம் 1500 கோடிக்கு ஒபந்தம்
- அல்லியான்ஸ் நிறுவனம் ரூ.9488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து
- ஃபாக்ஸ்கான் நிறுவனம் செய்யப்போகும் முதலீடு அளவு ரூ.2500 கோடி
- நெய்வேலி நிலக்கரி கழகம், ரூ.23800 ோடிக்கு முதலீடு
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ரூ.12,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- எய்சர் நிறுவனம் ரூ.1500 கோடிக்கு ஒப்பந்தம்.
முன்னதாக தொழில் துவங்க தமிழகம் நல்ல மாநிலம் என்றும், இங்கு குற்றச்செயல்கள் குறைவு என்றும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற தொழிலதிபர்கள் பலரும் புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications